Friday, May 31, 2024

ஸ்ரீமத் பாகவதம் - 362

 ஸ்ரீமத் பாகவதம் - 362

 


 

கண்ணனின் விஷமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. பொறுத்து பொறுத்துப் பார்த்த கோபிகள் யசோதையிடம் வந்து தினமும் முறையிடத் துவங்கினர்.

கண்ணன் வந்தால் பானையை எடுப்பானே என்று எங்கள் வீட்டில் வெண்ணெய்ப்பானையை உயரத்தில் உத்தரத்தில் உறிகட்டி அதில் வைத்திருந்தேன். கண்ணன் வந்து மேலே ஏறுவதற்கு சிறு பீடம், உரல் முதலியவற்றைப் பயன்படுத்துகிறான். சில சமயங்களில் பலராமன் மீதோ அல்லது வேறு சிறுவர்கள் மீதோ ஏறி உறியிலிருக்கும் வெண்ணெய்யை எடுக்கிறான்.

பானை அப்படியும் எட்டவில்லையென்றால் கையிலிருக்கும் கோலால் அழகாகத் துளைபோட்டு, அதிலிருந்து கொட்டும் தயிரை அள்ளிக் குடிக்கிறான்.

எவ்வளவு இருட்டாக இருந்தாலும் பயப்படுவதில்லை. அவன் அணிந்திருக்கும் ரத்தினங்களின் ஒளியே பானை இருக்கும்‌ இடத்தைக் கண்டுபிடிக்கப் போதுமாயிருக்கிறது.

வீட்டில் யாருமில்லாத சமயம் வந்து பானைகளைக் காலிசெய்துவிட்டு உடைக்கிறான்.

இவ்வாறு கோபிகள் மாற்றி மாற்றி யசோதையிடம் சொல்ல, பயந்தவன்போல் முகத்தை வைத்துக்கொண்டு‌ இல்லை என்பதுபோல் தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டு யசோதையின் புடைவைக்குள் ஒளிந்து நின்றுகொண்டிருந்தான் கண்ணன்.

கோபிகள் சொன்ன புகார்களைக் கேட்ட யசோதை கண்ணனைப் பார்த்தாள். அவனது பயந்த முகத்தைப் பார்த்து அதட்ட மனமின்றிச் சிரித்துவிட்டாள்.

புகார் சொன்னால் யசோதை கண்ணனை ஏதாவது கண்டிப்பாள் என்று நம்பி வந்த கோபிகள் யசோதை சிரித்ததைப் பார்த்து ஒன்றும்‌ சொல்லமுடியாமல் திரும்பினர்.

மறுநாள் கண்ணனை வெளியில் செல்லக்கூடாதென்று காலையிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள் யசோதை.

காலை எழுந்தது முதல் வீட்டைச் சுற்றி சுற்றி வந்தனர் குழந்தைகள். தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடினான் கண்ணன்.

பலராமன் இன்னொரு கன்றின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடினான்.

காலை பொழுதுவிடியும்போதே ஏதாவது விஷமம் செய்வதற்காகத் தெருவில் அலையும் கண்ணனைக் காணாமல் கோபிகளுக்கு என்னவோ போல் இருந்தது. நேற்று புகார் சொன்ன அனைவரும் இன்று கண்ணனைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டு யசோதை வீட்டிற்கு வந்தனர்.

அங்கே தோட்டத்தில் கன்றுக்கு இணையாக துள்ளி ஓடினார்கள் குழந்தைகள்.

வந்த அத்தனை பேரும் ஒரு புறம் குழந்தைகள் துள்ளி ஓடும் அழகை ரசித்தாலும் கீழே விழுந்துவிடப்போகிறார்களே என்று பயந்தனர்.

மகாபாரதம் பகுதி - 1 / Mahabharatham,

 

 மகாபாரதம் பகுதி - 1

கதைக்குள் செல்லும் முன்...


மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். 

 

 


 

 

ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும்.

 இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார்.

வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். 

ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. 

இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி. ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 

14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான்.

சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். 

இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். 

கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. 

இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான். அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான்.

அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. 

புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். 

பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். 

அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான்.

ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். 

அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். 

தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். 

ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன்.

பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். 

எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.

....தொடரும்....


ஸ்ரீமத் பாகவதம் - 361

 ஸ்ரீமத் பாகவதம் - 361

 


 

நடக்கத் துவங்கிய கண்ணனை கோபிகளால் சமாளிக்கவே முடியவில்லை. கண்ணனும் அவன் அண்ணனும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைத்தாண்டி அக்கம்பக்க்த்து வீடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். அங்கு சென்று சும்மா இருந்தார்களா? விஷமங்கள் துவங்கின.



கண்ணன் தங்கள் வீட்டிற்கு வரமாட்டானா என்று ஏங்குவதும், வந்தால் அவன் விஷமத்தைத் தாங்கவொண்ணாமல் தவிப்பதும் வாடிக்கையாயிற்று.

யசோதையிடம் சென்று நேரடியாகப் புகார் செய்யத் தயங்கினர். அவள் அரசியாயிற்றே. அவளிடமே சென்று அவள் பிள்ளையைப் பற்றி எப்படிக் கூறுவது என்று பயந்தனர். ஆனால், சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் கண்ணனின் விஷமங்கள் அப்படி.

எனவே, யசோதையின் பார்வை படும் இடத்தில் கூடி நின்றுகொண்டு அவளது காதில் விழுமாறு பேசத்துவங்கினர்.

இன்னிக்கு காலைல கண்ணன் வந்து என்ன செய்தான் தெரியுமா?

என்ன செய்தான்?

நான் உள்ள வேலையா இருந்தேன். அவன் பாட்டுக்கு வந்து எல்லாக் கன்னுக்குட்டியையும் அவிழ்த்துவிட்டுட்டுப் போய்ட்டான்.

அச்சோ.. அப்றம்..

சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள் அடுத்தவள். இவள் பட்ட அவஸதையை மனக் கண்ணால் கண்டுவிட்டாள் போலும்.

என்னடா கண்ணா இப்படி பண்ணின? ன்னு கேட்டா என்ன சொன்னான் தெரியுமா?

என்ன சொன்னான்?

அவிழ்த்துவிடத்தானே வந்திருக்கேங்கறான்.

அப்டின்னா?

எனக்கு மட்டும் புரிஞ்சுதான்ன? இனிமே இப்டி பண்ணாதடான்னு கொஞ்சம் கோவமா சொன்னேனா..

ம்ம்.

கலகலன்னு சிரிச்சுட்டான்.

ஹாஹா.. அப்றம்?

அப்றம்? என்ன கதையா சொல்றேன். அவன் சிரிப்புல எல்லாமே மறந்துபோச்சு. கொஞ்சம் வெண்ணெய் தாங்கோன்னு கேட்டான். ஒரு நினைப்பும் இல்லாம ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்ததும் ஓடிட்டான்.

சர்த்தான்.

நீ எவ்வளவோ பரவால்ல. எங்க வீட்ல நேத்து பானையெல்லாம் உருட்டி உடைச்சுட்டான்.
என்றாள் இன்னொருத்தி.

அடுத்தவள், அவன் சாப்டாலும் பரவால்ல. குரங்குக்கெல்லாம் கொடுக்கறான். வெண்ணெய் நன்னால்லன்னா அது என்னைப் பிடுங்க வரது.

ஹாஹாஹா

இன்னொருத்தி ஆரம்பித்தாள்..

எங்க வீட்ல தேடி தேடிப் பார்த்தான். வெண்ணெயே இல்ல. நான்தான் எல்லாத்தையும் அவர்ட்ட கொடுத்து வித்துட்டு வரதுக்காக மதுராக்கு அனுப்பிட்டேனே.

அப்றம்?

வெண்ணெய் இல்லன்னதும் கோச்சுண்டு தூளில தூங்கிண்டிருந்த குழந்தையைக் கிள்ளி அழவிட்டுட்டுப் போய்ட்டான்.

என்றதும் அத்தனை கோபிகளும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.
யசோதையின் காதில் அனைத்தும் விழுந்தன.

Tuesday, May 28, 2024

Bhagavat Gita Chapter 3 - Sloka 1 to 10

 

    Bhagavat Gita Chapter 3 - Sloka 1 to 10

 



Chapter 3 :
Verse : 1
 

तृतीयोध्याय :
कर्म योग :



अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन |
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ||
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜனார்தன |
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ ||

ஆர்ஜுனன் சொன்னது :
ஜனார்தனா, கேசவா, கர்மத்தைவிட ஞானமானது சிறந்ததென்பது உம்மால் மதிக்கபடுகிறதானால், அப்பொழுது ஏன் பயங்கரமான கர்மத்தில் என்னை ஈடுபடுத்துகிறீர்?
Arjuna said:
O Janaardana, O Kesava, why do You want to engage me in this ghastly warfare, if You think that knowledge is better than fruitive work?


Chapter 3 : Verse : 2

व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे |
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ||
வ்யாமிஸ்ரேணேவ வாக்யேன புத்திம் மோஹயஸீவ மே |
ததேகம் வத நிஸ்சித்ய யேன ஸ்ரேயோऽஹமாப்னுயாம் ||

முரண்படுவனபோன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகின்றீர் போலும். நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்.
You are, as it were, puzzling my mind by these seemingly involved expressions; therefore, tell me definitely the one discipline by which I may obtain the highest good.

Chapter 3 : Verse : 3

 

श्री भगवानुवाच
लोकेऽस्मिन्द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् ॥
ஸ்ரீ பகவானுவாச
லோகேऽஸ்மின்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக |
ஞானயோகேன ஸாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம் ||

ஸ்ரீ பகவான் சொன்னது :
பாபமற்றவனே, இவ்வுலகில் தத்வ விசாரம் செய்பவர்களுக்கு ஞானயோகம் என்றும், அதை அனுஷ்டிப்பவர்களுக்கு கர்மயோகம் என்றும்,  இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப்பட்டிருக்கின்றன.
Sri Bhagavan said:
O sinless Arjuna, in this world two courses of Sadhana [spiritual discipline] have been enunciated by Me in the past. In the case of Sankyayogi, the Sadhana proceeds along the path of knowledge; whereas in the case of Karmayogi, it proceeds along the path of Action.

 

 
Chapter 3 : Verse : 4

न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते |
न च संन्यसनादेव सिद्धिं समधिगच्छति ||
ந கர்மணாமனாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஶோऽஸ்னுதே |
ந ச ஸ்ந்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ||

புருஷன் கருமங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மமற்ற நிலையை [ஆத்ம சொரூபத்தை] அடைவதில்லை; வெரும் சன்யாசத்தால் மட்டுமே அவன் நிறை நிலையை [சித்தியை] பெறுவதுமில்லை.
Not by merely abstaining from work can one achieve freedom from action, nor by renunciation alone can one attain perfection.




Chapter 3 : Verse : 5

न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् |
कार्यते ह्यवश : कर्म सर्व : प्रकृतिजैर्गुणै : ||
ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் |
கார்யதே ஹ்யவச : கர்ம ஸர்வ : ப்ரக்ருதிஜைர்குணை : ||

யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாது இருப்பதில்லை. ஏனென்றால் பிரக்ருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றிக் கர்மமானது செய்விக்கப்படுகின்றது.
Surely none can ever remain inactive even for a moment; for, everyone is helplessly driven to action by nature-born qualities.

 Chapter 3 : Verse : 6

कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् |
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचार : स उच्यते ||
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் |
இந்த்ரியார்தான்விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே ||

கர்மேந்த்ரியங்களை அடக்கி, இந்த்ரிய விஷயங்களை மனதால் எண்ணிக்கொண்டிருக்கும் மூடன், பொய்யொழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
He who outwardly restraining the organs of senses and action, sits mentally dwelling on the objects of senses, that man of deluded intellect is called a hypocrite.


Chapter 3 : Verse : 7

यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन |
कर्मेन्द्रियै : कर्मयोगमसक्त : स विशिष्यते ||
யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேऽர்ஜுன |
கர்மேந்த்ரியை : கர்மயோகமஸக்த : ஸ விஸிஷ்யதே ||

அர்ஜுனா, ஆனால் இந்த்ரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று, கர்மேந்த்ரியங்களைக்கொண்டு கர்மயோகத்தை ஆரம்பிக்கிறானோ அவன் சிறந்தவன்.
On the other hand, he who controlling the organs of sense and action by the power of his will, and remaining unattached, undertakes the Yoga of Action through those organs, Arjuna, he excels.

Chapter 3 : Verse : 8

 

नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मण : |
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मण : ||
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : |
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண : ||

நித்திய கர்மத்தை நீ செய். ஏனெனில், கர்மம் செய்யாததைவிட கர்மம் செய்வது சிறந்து. கர்மம் செய்யாதிருப்பதனால் உன்னுடைய உடலைப்பேணுவதும் கூட சாத்தியமாகாது.
Therefore, do perform your allotted duty; for action is superior to inaction. Desisting from action,you cannot even maintain your body.

Chapter 3 : Verse : 9

 

यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धन : ।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्ग : समाचर ॥
யஞார்தாத்கர்மணோऽன்யத்ர லோகோऽயம் கர்மபந்தன : |
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க : ஸமாசர ||

யக்ஞகர்மம் தவிர [சுயநலமற்ற செயலைத்தவிர] மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நங்கு இயற்று.
Man is bound by his own action except when it is performed for the sake of sacrifice. Therefore, Arjuna, perform your duty efficiently, free from attachment, for the sake of sacrifice alone.

 

Chapter 3 : Verse : 10

 

सहयज्ञा : प्रजा : सृष्ट्वा पुरोवाच प्रजापति : ।
अनेन प्रसविष्यध्वमेषवोऽस्त्विष्टकामधुक् ॥
ஸஹயஞா : ப்ரஜா : ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி : |
அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷவோऽஸ்த்விஷ்டகாமதுக் ||

சிருஷ்ட்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்து, “இதனால் விருத்தியடையுங்கள்; இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும்” என்று கூறினார்.
Having created mankind along with the spirit of sacrifice at the beginning of creation the Creator, Brahma, said to them,” you shall prosper by this; may this yield the enjoyment you seek”.

 

 

🌷🌷🌷🌷🌷



 













Bhagavat Gita Chapter 2 - Sloka 61 to 72

 

    Bhagavat Gita Chapter 2 - Sloka 61 to  72

 



Chapter 2 :
Verse : 61
 

तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्पर : |
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ||
தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர : |
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஞா ப்ரதிஷ்டிதா ||

யோக நிஷ்டன் அவைகளை எல்லாம் அடக்கி என்னைப் பரகதியாகக் கொண்டிருக்கிறான். இந்த்ரியங்களை வசமாக்கியவனுக்கு அறிவு நிலைபெறுகிறது.
One who restrains his senses, keeping them under full consciousness upon Me, is known as a man of steady intelligence.


Chapter 2 : Verse : 62

ध्यायतो विषयान्पुंस : सङ्गस्तेषूपजायते |
सङ्गात् सञ्जायते काम : कामात्क्रोधोऽभिजायते |
த்யாயதோ விஷயான்பும்ஸ : ஸங்கஸ்தேஷூபஜாயதே |
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம : காமாத்க்ரோதோऽபிஜாயதே ||

இந்திரிய விஷயங்களை தியானிக்கின்ற மனிதனுக்கு அவைகளிடத்து பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையினின்று குரோதம் வளர்கிறது.
The man dwelling on sense-objects develops attachment for them; from attachment springs up desire, and from desire [unfulfilled] ensues anger.



Chapter 2 : Verse : 63

 

क्रोधाद्भवति संमोह : संमोहात्स्मृतिविभ्रम : ।
स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ||
க்ரோதாத்பவதி ஸம்மோஹ : ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம : |
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணஸ்யதி ||

சினத்தால் மனக்குழப்பம்; குழப்பத்தால் நினைவின்மை; நினைவு நாசத்தால் புத்திநாசம்; புத்திநாசத்தால் அழிந்துபோகிறான்.
From anger, complete delusion arises, and from delusion confusion of memory. When memory is confused, intelligence is lost, and when intelligence is lost one falls down again into the material pool.

 

 
Chapter 2 : Verse : 64

रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् |
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ||
ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயானிந்த்ரியைஸ்சரன் |
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரசாதமதிகச்சதி ||

ஆனால் ராகதுவேஷங்களிலிருந்து விடுபட்ட ஆத்மாவசப்பட்டுள்ள இந்திரியங்களைக்கொண்டு விஷயங்களில் சஞ்சரிக்கின்ற அடங்கிய மனதையுடையவன் மனத்தெளிவை அடைகிறான்.
But a person free from all attachment and aversion and able to control his senses through regulative principles of freedom, attains placidity of mind.




Chapter 2 : Verse : 65

प्रसादे सर्वदु:खानां हानिरस्योपजायते |
प्रसन्नचेतसो ह्याशु बुद्धि : पर्यवतिष्ठते ||
ப்ரஸாதே ஸர்வது:கானாம் ஹானிரஸ்யோபஜாயதே |
ப்ரஸன்னசேதஸோ ஹ்யாசு புத்தி: பர்யவதிஷ்டதே ||

மனவமைதியில் மனிதனது துன்பங்களனைத்தும் ஒழியும். ஏனெனில், மனவமைதியுடையவனுக்கு அறிவு விரைவில் ஆத்ம சொரூபத்தில் நிலைபெருகிறது.
With the attainment of such placidity of mind, all his sorrows come to an end; and the intellect of such a person of tranquil mind soon withdrawing itself from all sides, becomes firmly established in self.

 Chapter 2 : Verse : 66

नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना |
न चाभावयत : शान्तिरशान्तस्य कुत : सुखम् ||
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவனா |
ந சாபாவயத : சாந்திரசாந்தஸ்ய குத : ஸுகம் ||

மனமடங்காதவனுக்கு ஆத்ம போதமுமில்லை, ஆத்ம பாவனையுமில்லை. தியானமில்லதவனுக்கு சாந்தி கிடையாது. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
One who is not connected with the Supreme, can have neither transcendental intelligence nor a steady mind, without which there is no possibility of peace. And how can there be any happiness without peace?


Chapter 2 : Verse : 67

इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवांभसि ॥
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன்மனோऽனுவிதீயதே |
ததஸ்ய ஹரதி ப்ரஞாம் வாயுர்நாவமிவாம்பஸி ||

கப்பலைக் காற்றானது நீர்மேல் நிலைகுலைப்பது போன்று, அலைகின்ற இந்திரியங்களைப் பிந்தொடரும் மனது அவனது விவேகத்தை கவர்கிறது.
As a strong wind sweeps away a boat on the water, even one of the roaming senses on which the mind focuses can carry away a man’s intelligence.

Chapter 2 : Verse : 68

 

तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वश : |
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ||
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதானி ஸர்வச : |
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஞா ப்ரதிஷ்டிதா ||

ஆகையால், தோள்வலிமையுடையவனே! யாருடைய பொறிகள் புலன்களினின்று பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ அவனது அறிவு நிலைபெற்றுள்ளது.
Therefore, Arjuna, he, whose senses are completely restrained from their objects, is said to have a stable mind.

Chapter 2 : Verse : 69

 

या निशा सर्वभूतानं तस्यां जागर्ति संयमी |
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने : ||
யா நிசா சர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி சம்யமீ |
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிசா பஸ்யதோ முனே : ||

உயிர்களனைத்துக்கும் எது இரவோ அதில் யோகி விழித்திருக்கிறான். உயிர்களெல்லாம் துய்த்துணரும் நிலை தத்துவ ஞானிக்கு இரவு.
What is night for all beings is the time of awakening for the self-controlled; and the time of awakening for all beings is night for the introspective sage.

 

Chapter 2 : Verse : 70

 

आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमाप : प्रविशन्ति यद्वत् |
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी ||
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் சமுத்ரமாப : ப்ரவிசந்தி யத்வத் |
தத்வத்காமா யம் ப்ரவிசந்தி சர்வே ஸ சாந்திமாப்னோதி ந காமகாமீ ||

அசைவற்ற நிறை கடலில் ஆறுகள் சென்றடங்குவது போல், எம்முனிவன்பால் ஆசைகளனைத்தும் சென்றொடுங்குகின்றனவோ அவனே சாந்தியடைகிறான். ஆசையுள்ளவன் சாந்தியடையான்.

A person who is not disturbed by the incessant flow of desires-that enters like rivers into the ocean, which is ever being filled but is always still-can alone achieve peace, and not the man who strives to satisfy such desires.

 

Chapter 2 : Verse : 71

 

विहाय कामान् य : सर्वान् पुमांश्चरति निस्पृह : ।
निर्ममो निरहङ्कार : स शान्तिमधिगच्छति ॥
விஹாய காமான் ய : சர்வான் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ : |
நிர்மமோ நிரஹங்கார : ஸ சாந்திமதிகச்சதி ||

எப்புருஷன் ஆசைகளை அறவே அகற்றி, பற்றற்று, அஹங்கார மமகாரமின்றி நடமாடுகின்றானோ, அவன் சாந்தியடைகிறான்.
He who has given up all desires, and moves free from attachment, egoism and thirst for enjoyment attains peace.

 

Chapter 2 : Verse : 72

 

एषा ब्राह्मी स्थिति : पार्थ नैनां प्राप्य विमुह्यति ।
स्थित्वाऽस्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॥
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி |
ஸ்தித்வாऽஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி ||

பார்த்தா, இதுவே பிரம்ம நிலைபேறு ஆகும். இதை அடைபவனுக்கு மோகமில்லை, இறுதிக் காலத்திலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்.
Arjuna, such is the state of the God-realized soul; having reached this state, he overcomes delusion. And established in this state, even at the last moment, he attains Brahmic Bliss.

इति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे साङ्ख्ययोगो नाम द्वितीयोऽध्याय : ।

 With the blessings of Krishna today 

we have completed the reading of the second chapter 🙏

 

🌷🌷🌷🌷🌷



 












Bhagavat Gita Chapter 2 - Sloka 51 to 60

    Bhagavat Gita Chapter 2 - Sloka 51 to  60

 



Chapter 2 :
Verse : 51
 

कर्मजं बुद्धियुक्ताहि फलं त्यक्त्वा मनीषिण : |
जन्मबन्धविनिर्मुक्ता : पदं गच्छन्त्यनामयम् ||
கர்மஜம் புத்தியுக்த்தாஹி பலம் த்யக்த்வா மனீஷிண : |
ஜன்மபந்தவினிர்முக்தா : பதம் கச்சந்த்யனாமயம் ||

சமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்துதித்த பலனை தியாகம் செய்து பிறவித்தளையினின்று விடுபட்டு துன்பமற்ற பதவியை நிச்சயமாக அடைகிறார்கள்.
For wise men possessing an equipoised mind, renouncing the fruit of actions and freed from the shackles of birth, attain the blissful supreme state.


Chapter 2 : Verse : 52

यदा ते  मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति |
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च ||
யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி |
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச ||

எப்பொழுது உன் புத்தியானது அவிவேகம் என்னும் குற்றத்தைத் தாண்டுமோ, அப்பொழுது கேட்க வேண்டியதிலும் கேட்டதிலும் வைராக்கியம் அடைவாய்.
When your mind has fully crossed the mire of delusion, you shall become indifferent to all that has been heard and all that is to be heard.



Chapter 2 : Verse : 53

 

श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला |
समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि ||
ஸ்ருதிவிப்ரதிபன்னா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா |
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி ||

எப்பொழுது, கேட்டுக் கலக்கமடைந்துள்ள உன்னுடைய புத்தியானது சமாதியில், பரமாத்மாவிடத்தில் சலிக்காததாய் உறுதியாய் நிற்குமோ அப்பொழுது நீ யோகம் அடைவாய்.
When your intellect, confused by hearing conflicting statements, will rest, steady and undistracted [in meditation] on God, you will then attain Yoga.

 

 
Chapter 2 : Verse : 54

अर्जुन उवाच
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव |
स्थितधी : किं प्रभाषेत किमासीत व्रजेत किम् ||
ஸ்திதப்ரக்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ |
ஸ்திததீ : கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||

அர்ஜுனன் சொன்னது
கேசவா, சமாதியில் நிலைத்த நிறைஞானியின் லக்ஷணம் யாது ? உறுதியான அறிவுடையவன் எதைப் பேசுகிறான் ? எப்படி அமர்கிறான், எவ்வாறு நடக்கிறான்?
Arjuna said: O Krishna, what are the symptoms of one whose consciousness is thus merged in transcendence? How does he speak, and what is his language? How does he sit, and how does he walk?




Chapter 2 : Verse : 55

श्री भगवानुवाच
प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् |
आत्मन्येवात्मना तुष्ट : स्थितप्रज्ञस्तदोच्यते ||
ப்ரஜஹாதி யதா காமான் சர்வான் பார்த மனோகதான் |
ஆத்மன்யேவாத்மனா துஷ்ட : ஸ்திதப்ரஞஸ்ததோச்யதே ||

ஸ்ரீ பகவான் சொன்னது
பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளையெல்லாம் அகற்றி ஆத்மாவில் ஆத்மத் திருப்தியடைந்திருப்பவன் ஸ்திதப்ரஞன் என்று சொல்லப்படுகிறான்.
Sri Bhagavan said:
Arjuna, when one thoroughly dismisses all cravings of the mind, and is satisfied in the self through  [ the joy of ] the self, then he is called stable of mind.

 Chapter 2 : Verse : 56

दु:खेष्वनुद्विग्नमना : सुखेषु विगतस्पृह : |
वीतरागभयक्रोध : स्थितधीर्मुनिरुच्यते ||
து:கேஷ்வனுத்விக்னமனா : சுகேஷு விகதஸ்ப்ருஹ : |
வீதராகபயக்ரோத : ஸ்திததீர்முனிருச்யதே ||

துக்கத்தில் அசையாத மனதையுடையவன், இன்பத்தில் நாட்டமில்லாதவன், பற்று, அச்சம்,சினம் அற்ற உறுதியான உள்ளத்தையுடையவன் முனி எனப்படுகிறான்.
One who is not disturbed in mind even amidst the threefold miseries or elated when there is happiness, and who is free from attachment, fear and anger, is called a sage of steady mind.


Chapter 2 : Verse : 57

य : सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम् |
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्टिता ||
ய : ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய சுபாசுபம் |
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஞா ப்ரதிஷ்டிதா ||

எவன் எங்கும் பற்றிலனாய், நலம் தருவதை அடைந்து மகிழாதும், கேடு தருவதை அடைந்து நொந்து கொள்ளாதுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதி பெறுகிறது.
He who is unattached to everything, and meeting with good and evil, neither rejoices nor recoils, his mind is stable.

Chapter 2 : Verse : 58

 

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश : |
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ||
யதா சம்ஹரதே சாயம் கூர்மோऽங்கானீவ ஸர்வச : |
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஞா ப்ரதிஷ்டிதா ||

ஆமை தன் அவயவங்களை அடக்கிக்கொள்வது போல் பொருள்களிடத்திலிருந்து பொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலைபெறுகிறது.
One who is able to withdraw his senses from sense objects, as the tortoise draws its limbs within the shell, is firmly fixed in perfect consciousness.

Chapter 2 : Verse : 59

 

विषया विनिवर्तन्ते निराहारस्य देहिन : |
रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते ||
விஷயா வினிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹின : |
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே ||

பொறிகளைப் புலன்களிடத்துப் போகவொட்டாது தடுப்பவனுக்கு விஷயானுபவங்கள் அற்றுப்போய்விடுகின்றன. இச்சை எஞ்சியிருக்கிறது. பரமாத்மாவை தரிசித்தபின், அவனுடைய இச்சையும் அழிகிறது.
Sense objects turn away from him, who does not enjoy them with his senses; but the taste for them persists, this relish also disappears in the case of the man of stable mind when he sees the Supreme.

 

Chapter 2 : Verse : 60

 

यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चित : |
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मन : ||
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித : |
இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸபம் மன : ||

குந்தியின் மைந்தா,நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிக்கும் இந்த்ரியங்கள் பலவந்தமாகப் பற்றியிழுக்கின்றன.
The senses are so strong and impetuous, O Arjuna, that they forcibly carry away the mind even of a man of discrimination who is endeavoring to control them.

 

 

🌷🌷🌷🌷🌷



 











Bhagavat Gita Chapter 2 - Sloka 41 to 50

 

 

 Bhagavat Gita Chapter 2 - Sloka 41 to  50

 



Chapter 2 :
Verse : 41
 

व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन |
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ||
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தன |
பஹுசாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயினாம் ||

குருகுலத்துதித்தோய், இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்குப் புத்தியானது ஒன்றேயாம். உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளையுடையனவும் முடிவற்றவைகளுமாம்.
Arjuna, in this yoga [of selfless action ] the intellect is determinate and directed towards one ideal; whereas the intellect of the undecided [ignorant men moved by desires] wanders in all directions, after innumerable aims.


Chapter 2 : Verse : 42 - 44



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चित : |
वेदवादरता : पार्थ नान्यदस्तीतिवादिन : ||
कामात्मान : स्वर्गपरा : जन्मकर्मफलप्रदाम् |
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ||
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् |
व्यवसायात्मिका बुद्धि : समाधौ न विधीयते ||


யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித : |
வேதவாதரதா : பார்த நான்யதஸ்தீதிவாதின : ||
காமாத்மான : ஸ்வர்கபரா : ஜன்மகர்மபலப்ரதாம் |
க்ரியாவிசேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி ||
போகைஸ்வர்யப்ரசக்தானாம் தயாபஹ்ருதசேதஸாம் |
வ்யவஸாயாத்மிகா புத்தி : ஸமாதௌ ந விதீயதே ||

பார்தா, வேதமொழியில் விருப்பமுடையவர்கள், சுவர்கத்தை விளைவிக்கின்ற கருமத்திற்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பவர்கள், காமம் நிறைந்தவர்கள், சுவர்கமே முடிவான பேறு என்பவர்கள்- இத்தகைய அவிவேகிகளுடைய புஷ்பாலங்காரமான வசனத்தைக்கேட்டு அறிவு கலங்கப் பெறுபவர்க்கும், போக ஐசுவரியத்தில் பற்றுடையவர்க்கும் உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை. அவர்களுடைய புஷ்பாலங்காரமான சொற்கள் போக ஐசுவரியத்தைப் பெறுவதற்கான காமிய கரும விசெஷங்கள் நிறைந்தனவாயும் புதிய பிறவிகளை உண்டுபண்ணுவனவாயும் இருக்கும்.


Arjuna, those who are full of worldly desires and devoted to the letter of Vedas, who look upon heaven, as the supreme goal and argue that there is nothing beyond heaven are unwise. They utter flowery speech recommending many rituals of various kinds for attainment of pleasure and power with rebirth as their fruit. Those whose minds are carried away by such words, and who are deeply attached to pleasure and worldly power, cannot attain the determinate intellect concentrated on God.

 

There are three slokas
Only by reading the meaning of these three slokas will give the collective understanding of the slokas otherwise it will be ubrupt



Chapter 2 : Verse : 45

 

त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन |
निर्द्वन्द्वो नित्यसत्वस्थो निर्योगक्षेम आत्मवान् ||
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன |
நிர்த்வந்த்வோ நித்யஸத்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான் ||

அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள்.
நீ இருமைகளின்று விடுபட்டு, எப்பொழுதும் நடுவு நின்று, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக.
Arjuna, the vedas thus deal with the evolutes of the three Gunas[modes of prakruti], viz, worldly enjoyments and the means of attaining such enjoyments; be thou indifferent to these enjoyments and their means, rising above pairs of opposites like pleasure and pain etc; established in the eternal Existence [God], absolutely unconcerned about the supply of wants and the preservation of what has been already attained and selfcontrolled.

 

 
Chapter 2 : Verse : 46

यावानर्थ उदपाने सर्वत : संप्लुतोदके |
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत : ||
யாவானர்த்த உதபானே ஸர்வத : ஸம்ப்லுதோதகே |
தாவான்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத : ||

எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன்படுகிறவளவு, ஞானத்தையுடைய பிரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன்படுகின்றன .
All purposes served by a small well can at once be served by great reservoir of water. Similarly, all the purpose of the Vedas can be served to one who knows the purpose behind him.




Chapter 2 : Verse : 47

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன |
மாகர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி ||

கர்மத்தில் மட்டிலும் உனக்கு அதிகாரமுண்டு. ஒருபோதும் பலன்களில் இல்லை. கர்மபலன்களை உண்டுபண்ணுபவன் ஆகாதே. கர்மம் செய்யாதிருப்பதில் உன்னுடைய பற்றுதல் இருக்கலாகாது.
You have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your actions, and never be attached to not doing your duty.

 Chapter 2 : Verse : 48

योगस्थ : कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय |
सिद्ध्यसिद्ध्यो : समो भूत्वा समत्वं योग उच्यते ||
யோகஸ்த : குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய |
ஸித்த்யஸித்த்யோ : ஸமோ பூத்வா சமத்வம் யோக உச்யதே ||

தனஞ்ஜயா, யோகத்தில் நிலைபெற்று, பற்று அற்று, வெற்றி தோல்விகளைச் சமமாகக்கொண்டு, கருமம் செய். நடுவுநிலை யோகம் என்று சொல்லப்படுகிறது.
Arjuna, perform your duties established in yoga, renouncing attachment, and even-tempered in success and failure; evenness of temper is called Yoga.


Chapter 2 : Verse : 49

दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय |
बुद्धौ शरणमन्विच्छ कृपणा : फलहेतव : ||
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தனஞ்ஜய |
புத்தௌ சரணமன்விச்ச க்ருபணா : பலஹேதவ : ||

சமபுத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல் புரிவது மிகக் கீழானதே. சமபுத்தியின்கண் சரணடைக. பயன் கருதுபவர் கயவர் ஆவர்.
O Dhananjaya, keep all abominable activities far distant by devotional service, and in that consciousness surrender unto the Lord. Those who want to enjoy the fruits of their work are misers.

Chapter 2 : Verse : 50

 

बुद्धियुक्तो जहानीह उभे सुकृतदुष्कृते |
तस्माद्योगाय युज्यस्व योग : कर्मसु कौशलम् ||
புத்தியுக்தோ ஜஹாநீஹ உபே சுக்ருத துஷ்க்ருதே |
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக : கர்மஸு கௌசலம் ||

சமபுத்தியுடையவன் நன்மை தீமை இரண்டையும் இம்மையில் துறக்கிறான். ஆகையால் நீ யோகத்தைச் சார்ந்திடு. யோகம் கர்மங்களில் வல்லமை ஆகும்.
A man endowed with equanimity rids himself of both good and bad actions even in this life. Therefore strive for yoga, which is the art of all work.

 

 

🌷🌷🌷🌷🌷



 










Bhagavat Gita Chapter 2 - Sloka 31 to 40

 

 Bhagavat Gita Chapter 2 - Sloka 31 to  40

 



Chapter 2 :
Verse : 31

स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि |
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते ||
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி |
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽன்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே ||

ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது. அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை.
Considering your specific duty as kshatriya, you should know that there is no better engagement for you than fighting on religious principles; and so there is no need for trembling.


Chapter 2 : Verse : 32

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् |
सुखिन : क्षत्रिया : पार्थ लभन्ते युद्धमीदृशम् ||
யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம் |
ஸுகின : க்ஷத்ரியா : பார்த லபந்தே யுத்தமீத்ருசம் ||

பார்த்தா, தற்செயலாய் நேர்ந்ததும் திறந்த சுவர்க்க வாயில் போன்றதுமான இந்த யுத்தத்தை பாக்கியவான்களாகிய க்ஷத்ரியர்களே அடைகிறார்கள்.
O Partha, happy are the kshatriyas to whom such fighting opportunities come unsought, opening for them the doors of the heavenly planets.


Chapter 2 : Verse : 33

 

अथ चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि |
तत : स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि ||
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸ்ங்க்ராமம் ந கரிஷ்யஸி |
தத : ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||

அறப்போர் ஆகிய இதனை செய்யாமற் போவாயாகில் நீ ஸ்வதர்மத்தையும் கீத்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்.
If however, you do not perform your religious duty of fighting, then you will certainly incur sins for neglecting your duties and thus lose your reputation as a fighter.

 

 
Chapter 2 : Verse : 34 

अकीर्तिञ्चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् |
संभावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ||
அகீர்திஞ்சாபி பூதானி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம் |
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே ||

இன்னும் உயிர்கள் உன்னைப்பற்றி யாண்டும் அபகீர்த்தியை பேசுவார்கள். போற்றுதலுக்குரிய ஒருவனுக்கு அபகீத்தியானது  மரணத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
People will always speak of your infamy, and for a respectable person, dishonour is worse than death.




Chapter 2 : Verse : 35

भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथा : |
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ||
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா : |
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் ||

பயத்தால் போரினின்று நீ பின்வாங்கினாயென்று மஹாரதிகர்கள் எண்ணுவார்கள். எவர்பால் நீ பெருமை பெற்றிருந்தாயோ, அவர்பால் சிறுமையுருவாய்.
The great generals who have highly esteemed your name and fame will think that you have left the battlefield out of fear only, and thus they will consider you insignificant.

 Chapter 2 : Verse : 36

अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिता : |
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दु:खतरं नु किम् ||
அவாச்யவாதாம்ஸ்ச ப்ஹூன்வதிஷ்யந்தி தவாஹிதா : |
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ துக்கதரம் நு கிம் ||

உன்னுடைய சத்துருக்கள் உன்னுடைய சாமர்த்தியதை நிந்திக்கிரவர்களாக பல சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்லுவார்கள். அதைக்காட்டிலும் பெருந்துன்பம் யாது உளது ?
Your enemies will describe you in many unkind words and scorn your ability. What could be more painful for you ?


Chapter 2 : Verse : 37

हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् |
तस्मादुत्तिष्ट कौन्तेय युद्धाय कृतनिश्चय : ||
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் |
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய : ||

போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய், வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய். ஆகையால் கௌந்தேய, போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு.
O son of Kunti, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with the determination and fight.

Chapter 2 : Verse : 38

 

सुखदु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ |
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ||
ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ |
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||

இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச்
சமனாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.
Do thou fight for the sake of fighting, without considering happiness or distress, loss or gain, victory or defeat- and by doing so, you shall never incur sin.

 

Chapter 2 : Verse : 39

 

एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगेत्विमां शृणु |
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ||
ஏஷா தேऽபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகோத்விமாம் ஸ்ருணு |
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி ||

ஆத்ம தத்துவத்தைப்பற்றிய அறிவு உனக்குப் புகட்டப்பட்டது. இனி பார்த்தா, யோகத்தைப் பற்றிக் கேள். யோகபுத்தியைப் பெறுவாயாகில், நீ கர்மபந்தத்திலிருந்து விடுபடுவாய்.
Arjuna, this attitude of mind has been presented to you from the point of view of jnanayoga, now hear the same as presented from the standpoint of karmayoga [the yoga of selfless action ]. Equipped with this attitude of mind, you can free yourself completely from the bondage of karma.


Chapter 2 : Verse : 40

नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते |
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् |
நேஹாபிக்ரமநாசோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே |
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ||

இதில் செய்யும் முயற்சி வீண்போதல் இல்லை. குற்றமொன்றும் வராது. இதைச் சிறிது பழகினும் பெரும் பயத்தினின்று {பிறப்பு இறப்பு } இது காப்பாற்றும்.
In this path [selfless action] there is no loss of effort, nor there is fear of contrary result, even a little practice of this discipline saves one from the fear of birth and death.

 

 

🌷🌷🌷🌷🌷



 









Bhagavat Gita Chapter 2 - Sloka 21 to 30

 Bhagavat Gita Chapter 2 - Sloka 21 to  30

 



Chapter 2 :
Verse : 21

वेदाऽविनाशिनं नित्यं य एनमजमव्ययम् |
कथं स पुरुष : पार्थ कं घातयति हन्ति कम् ||
வேதா ऽவிநாசினம் நித்யம் ய ஏனமஜமவ்யயம் |
கதம் ஸ புருஷ : பார்த்த கம் காதயதி ஹந்தி கம் ||

பார்த்தா, இவ்வாத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக்கொல்விப்பான் ?
O Partha, how can a person who knows that the soul is indestructible, eternal, unborn and immutable, kill anyone or cause anyone to kill ?

Chapter 2 : Verse : 22

वासांसि जीर्णानि यथा विहाय
    नवानि गृह्णाति नरो ऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा –
     न्यन्यानि संयाति नवानि देही ||
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
     நவானி க்ருஹ்ணாதி நரோऽபராணி |
ததா சரீராணி விஹாய ஜீர்ணா-
     ன்யன்யானி ஸம்யாதி நவானி தேஹி ||

பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக் கொள்வது போன்று ஆத்மா பழைய உடல்களை நீத்துப் புதியன புகுகிறது.
As a man shedding worn-out garments, takes other new ones, likewise the embodied soul, casting off worn-out bodies, enters into others which are new.


Chapter 2 : Verse : 23

 

नैनं छिदन्ति शस्त्राणि नैनं दहति पावक : |
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुत : ||
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக : |
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத : ||

ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டாது, தீ அதை எரிக்காது, நீர் நனைக்காது, காற்று அதை உலர்த்தாது.
Weapons cannot cut it nor can fire burn it; water cannot wet it nor can wind dry it.

 

 
Chapter 2 : Verse : 24 

अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च |
नित्य : सर्वगत : स्थाणुरचलोऽयं सनातन : ||
அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽசோஷ்ய ஏவ ச |
நித்ய : ஸர்வகத : ஸ்தாணுரசலோऽயம் ஸநாதன : ||

இவ்வாத்மா வெட்டுண்ணான்; வேகான்; நனையான்; உலரான். இவன் நித்தியமாய், நிலையாய், அசைவற்றவனாய் என்றுமிருப்பான்.
This Soul is unbreakable and insoluble, and can neither burned nor dried. He is everlasting, omnipresent, unchangeable, immovable and ever lasting.




Chapter 2 : Verse : 25

अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते |
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ||
அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே |
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமர்ஹஸி ||

இவ்வாத்மா பொறிகளுக்குத் தென்படாதவன், சிந்தனைக்கு எட்டாதவன், மாறுபடாதவன் எனப்படுகிறான். ஆத்மாவை இங்ஙனம் அறிந்து துன்பத்தை அகற்று.
This soul is unmanifest; it is unthinkable; and it is spoken of as immutable. Therefore, knowing this as such, you should not grieve.

 Chapter 2 : Verse : 26

अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् |
तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि ||
அத சைனம் நித்யஜாதம் நித்யம் வா மன்யஸே ம்ருதம் |
ததாபி த்வம் மஹாபாஹோ நைனம் சோசிதுமர்ஹஸி ||

ஓருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறானென்று எண்ணுவாயானால், பெருந்தோளுடையாய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது.
If, however, you think that the soul is always born and dies forever, you still have no reason to lament, O mighty-armed.


Chapter 2 : Verse : 27

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च |
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ||
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச |
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் சோசிதுமர்ஹஸி ||

பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் உருதியெனில், விலக்கமுடியாத விஷயத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது.
One who has taken his birth is sure to die, and after death one is sure to take birth again. Therefore, you should not lament for things which is unavoidable.

Chapter 2 : Verse : 28

 

अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत |
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ||
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத |
ஆவ்யக்தநிதனான்யேவ தத்ர கா பரிதேவனா ||

பாரதா, உயிர்கள் துவக்கத்தில் தோன்றாமலும், இடையில் தோன்றியும், இறுதியில் தோன்றாமலும் இறுக்கின்றன. இதைக் குறித்து வருந்துவானேன்?
O Bharata, all created beings unmanifest in their beginning, manifest in their interim state, and unmanifest again when annihilated. So what is the need there for lamentation?

 

Chapter 2 : Verse : 29

 

आश्चर्यवत्पश्यति कश्चिदेन-
    माश्चर्यवद्वदति तथैव चान्य : |
आश्चर्यवश्चैनमन्य : शृणोति
    श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ||
ஆச்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேன-
     மாச்சர்யவத்வததி  ததைவ சான்ய : |
ஆச்சர்யவச்சைனமன்ய : ஸ்ருணோதி
      ஸ்ருத்வாப்யேனம் வேத ந சைவ கஸ்சித் ||

ஒருவன் இவ்வாத்மாவை ஆச்சர்யமானது போல் காண்கிறான், அங்ஙனமே இன்னொருவன் ஆச்சர்யம் போல் பேசுகிறான், வேரொருவன் இவ்வாத்மாவை ஆச்சர்யம் போல் கேட்கிறான், மற்றும் ஒருவன் கேட்டாலும் இவ்வாத்மாவை அறிகிறதேயில்லை.
Some look on the soul as amazing, some describe him as amazing, and some hear of him as amazing, while others, even after hearing about him, cannot understand him at all.


Chapter 2 : Verse : 30

देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत |
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ||
தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே சர்வஸ்ய பாரத |
தஸ்மாத்சர்வாணி பூதானி ந த்வம் சோசிதுமர்ஹஸி ||

பாரதா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்.
O descendant of Bharata, he who dwells in the body can never be slain. Therefore, you need not grieve for any living being.

 

 

🌷🌷🌷🌷🌷



 








Bhagavat Gita Chapter 2 - Sloka 11 to 20

 

 

 Bhagavat Gita Chapter 2 - Sloka 11 to  20

 



Chapter 2 :
Verse : 11

श्री भगवानुवाच
अशोच्यानन्वशोचस्त्वं प्र ज्ञावादांश्च भाषसे |
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिता : ||
ஸ்ரீ பகவான் உவாச
அசோச்யானன்வசோசஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே |
கதாஸூனகதாஸூன்ஸ்ச நானுசோசந்தி பண்டிதா : ||

ஸ்ரீ பகவான் சொன்னது :
துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயருருகிறாய். ஞானியரது நல்லுரையும் நவில்கிறாய்.  இறந்தார்க்கோ இருப்பார்க்கோ புலம்பார் பண்டிதர்.
Sri Bhagavan Said :
Arjuna, you grieve over those who should not be grieved for and yet speak like learned. Wise men do not sorrow over the dead or the living.


Chapter 2 : Verse : 12

न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपा : |
न चैव न भविष्याम : सर्वे वयमत : परम् ||
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜனாதிபா : |
ந சைவ ந பவிஷ்யாம : ஸர்வே வயமத : பரம் ||

முன்பு எப்பொழுதாவது நான், நீ, இவ்வரசர்கள் ஆகியவர்களில் யாராவது இல்லாதிருந்ததில்லை. இக்காயங்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற் போகமாட்டோம்.
Never was there a time when I did not exist, nor you, nor all these kings; nor in the future shall any of us cease to be.


Chapter 2 : Verse : 13

 

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा |
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ||
தேஹினோऽஸ்மின்யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா |
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி ||

ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும், யௌவனமும், மூப்பும் உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது. தீரன் அதன் பொருட்டு மயங்கான்.
Just as boyhood, youth and old age are attributed to the soul through this body, even so it attains another body. The wise man does not get deluded about this.


Chapter 2 : Verse : 14 

 मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदु:खदा : |
आगमापायिनो ऽनित्यास्तांस्तितिक्षस्व भारत  ||
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ணஸுகது:கதா : |
ஆகமாபாயினோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத ||

குந்தியின் மைந்தா, பொறிகள் புலங்களிடத்துப் பொருந்துதலால் குளிர் வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் நிலையாமயும் அவைகளின் இயல்பு. அவைகளைப் பொருத்துக்கொள்.
O son of Kunti, the nonpermanent appearance of happiness and distress, and their disappearance in due course, are like the appearance and disappearance of winter and summer seasons. They arise from sense perception. O scion of Bharata, one must learn to tolerate them without being disturbed.




Chapter 2 : Verse : 15

यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ |
समदु:खसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ||
யம் ஹி வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப |
ஸமது:கஸுகம் தீரம் சோ ऽம்ருதத்வாய கல்பதே ||

புருஷ ஸ்ரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறான், இன்பதுன்பங்களை ஒப்பாக உணர்கிறான், அத்தீரனே சாகா நிலைக்குத் தகுந்தவனாகிறான்.
Arjuna, the wise man to whom pain and pleasure are alike, and who is not tormented by these contacts, becomes eligible for liberation.

 

 Chapter 2 : Verse : 16

नासतो विद्यते भावो नाभावो विद्यते सत : |
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्वदर्शिभि : ||
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத : |
ஊபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வனயோஸ்தத்வதர்சிபி : ||

இல்லாததற்கு இருப்புக்கிடையாது. இருப்பது இல்லாமற்போவதுமில்லை. உண்மையையறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும்.
The unreal has no existence, and the real never ceases to be, the reality of both has thus been perceived by the seers of truth.


Chapter 2 : Verse : 17

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् |
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ||
அவிநாசி து தத்வித்தி யேன ஸர்வமிதம் ததம் |
விநாசமவ்யயஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி ||

உலகெல்லாம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக. அழியாப்பொருளை அழிக்க யாருக்கும் இயலாது.
That which pervades the entire body, you should know to be indestructible. No one is able to destroy that imperishable soul.

Chapter 2 : Verse : 18

 

अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता : शरीरिण : |
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ||
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா : சரீரிண  : |
அநாசினோ ऽப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத ||

நித்தியமாய், நாசமற்றதாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் இவ்வுடல்கள் யாவும் அழியும் தன்மையனவாம். ஆதலால் பாரதா, போர் புரிக.
The material body of the indestructible, immeasurable and eternal living entity is sure to come to an end; therefore, fight, O descendant of Bharata.

 

Chapter 2 : Verse : 19

 

य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् |
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ||
ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் |
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ||

யார் இந்த ஆத்மாவை கொல்லுகிறவனென்று அறிகிறானோ இன்னும் யார் இந்த ஆத்மாவை கொல்லப்பட்டவன் என்று நினைக்கிறானோஅவ்விருவரும் அறிந்தவர்களல்லர் இவ்வாத்மா கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை.
Both of them are ignorant, he who knows the soul to be capable of killing and he who takes it as killed, for verily the soul neither kills, nor is killed.


Chapter 2 : Verse : 20

न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूय : |
अजो नित्य : शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ||
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய : |
அஜோ நித்ய : சாஸ்வதோऽயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே ||

இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று. [இருந்து பிறகு இறந்து போவதன்று] இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. காயம் கொல்லப்படுமிடத்தும் ஆத்மா கொல்லப்படுவதில்லை.
The soul is never born nor dies; nor does it become only after being born. For it is unborn, eternal, everlasting and ancient; even though the body is slain, the soul is not.

 

 

🌷🌷🌷🌷🌷



 







Bhagavat Gita Chapter 2 - Sloka 1 to 10

 

 Bhagavat Gita Chapter 2 - Sloka 1 to  10

 



Chapter 2 :
Verse : 1

द्वितीयोऽध्याय :
सांख्ययोग :
सञ्जय उवाच
तं तथा कृपयाऽऽविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् |
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन : ||
இரண்டாம் அத்தியாயம்
ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயா ऽऽவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம் |
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதன : ||

ஸஞ்ஜயன் சொன்னது :
அங்ஙனம் இரக்கம் ததும்பி, கண்களில் நீர் நிறைந்து, பார்வை குறைந்து துக்கப்பட்ட
அர்ஜுனனுக்கு, மதுஸூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்.
Sanjaya said :
Seeing Arjuna, full of compassion, his mind depressed, his eyes full of tears, Madhusudana, Krishna, spoke
the following words.


Chapter 2 : Verse : 2

श्री भगवानुवाच
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् |
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ||
ஸ்ரீ பகவான் உவாச
குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் |
அனார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுன ||

ஸ்ரீ பகவான் சொன்னது :
அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான
இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?
The Supreme said :
Arjuna, how have these impurities come upon in your mind, at this time of crisis ? They are not at all befitting
a man who knows the value of life. They lead not to higher planets but to infamy.


Chapter 2 : Verse : 3

 

क्लैब्यं मा स्म गम : नैतत्त्वय्युपपद्यते |
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ||
க்லைப்யம் மா ஸ்ம கம : நைதத்த்வய்யுபபத்யதே |
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்தோத்திஷ்ட பரந்தப ||

பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே,
இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.
O son of Partha, do not yield to this degrading impotence. It does not you. Give up such petty weakness of heart and
arise, O chastiser of the enemy.


Chapter 2 : Verse : 4 

 

अर्जुन उवाच
कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन |
इषुभि : प्रतियोत्स्यामि पूजर्हावरिसूदन ||
கதம் பீஷ்மமஹம் சங்க்யே த்ரோணம் ச மதுஸூதன |
இஷுபி : ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதன ||

அர்ஜுனன் சொன்னது
பகைவரைத் தொலைப்பவரே, மது என்ற அரக்கனைக் கொன்றவரே, போற்றுதர்க்குரிய
பீஷ்மரையும், த்ரோணரையும் நான் எங்ஙனம் போரில் எதிர்த்துப் பாணங்களால் போர்புரிவேன்?
Arjuna said :
O killer of enemies, O killer of Madhu, how can I counterattack with arrows in battle, men like Bhishma and Drona,
who are worthy of my worship?




Chapter 2 : Verse : 5

गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके |
हत्वाऽर्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान् ||
குரூனஹத்வா ஹி மஹானுபாவான் ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே |
ஹத்வாऽர்தகாமாம்ஸ்து குரூனிஹைவ புஞ்ஜீய போகான்ருதிரப்ரதிக்தான் ||

மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல் இவ்வுலகில் பிக்ஷையேற்று உண்பதும்
சாலச்சிறந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும் போகத்தையும்
இம்மையிலேயே அனுபவிப்பவனாவேன்.
It would be better to live in this world by begging than to live at the cost of the lives of great souls who are my teachers.
Even though desiring worldly gain, they are superiors. If they are killed, everything we enjoy will be tainted with blood.

 

 Chapter 2 : Verse : 6

न चैतद्विद्म : कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा जयेयु : |
यानेन हत्वा न जिजीविषामस्तेऽवस्थिता : प्रमुखे धार्तराष्ट्रा : ||
ந சைதத்வித்ம : கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா ஜயேயு : |
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்திதா : ப்ரமுகே தார்தராஷ்ட்ரா : ||

நாம் இவர்களை ஜயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பது – இதில் நமக்கு எது மேலானது என்பது
விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அத்தகைய
த்ருதராஷ்ட்ரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர்.
We don’t know which is better- conquering them or being conquered by them. By killing whom we will not be happy
to live, the sons of Drutharaashtra, are now standing before us on the battlefield.


Chapter 2 : Verse : 7

कार्पण्यदोषोपहतस्वभाव: पृच्छामि त्वां धर्मसम्मूढचेता : |
यच्छ्रेय : स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ||
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ :
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: |
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேऽஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் ||

சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப்
பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன். எனக்குச் சிறப்பீனுவதை உறுதியாக
இயம்பும்; நான் உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன், உபதேசித்தருளும்.
Now I am confused about my duty and have lost all composure because of miserly weakness. In this condition, I am asking You to tell me for certain what is best for me. Now  I am Your disciple, and a soul surrendered unto You. Please instruct me.

Chapter 2 : Verse : 8

 

न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् |
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम् ||
ந ஹி ப்ரபஸ்யாமி மமாபனுத்யாத்யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் |
அவாப்ய பூமாவஸபத்னம்ருத்தம் ராஜ்யம் சுராணாமபி சாதிபத்யம் ||

பூமியில் நிகரற்றதும், ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும், அமரர்க்கு அதிபதியாயிருக்கப்பெரிமனும், என் புலன்களைப் பொசுக்குகின்ற
துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
For even on obtaining undisputed sovereignty and an affluent kingdom on this earth and lordship over the gods, I do not see any means that can drive away the grief which is drying up my senses.

 

Chapter 2 : Verse : 9

 

सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेश : परन्तप : |
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह ||
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச : பரந்தப : |
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ ||

ஸஞ்ஜயன் சொன்னது :
பகைவனைப் பொசுக்கும் குடாகேசனாகிய அர்ஜுனன் ஹ்ருஷீகேசனாகிய கோவிந்தனுக்கு இங்ஙனம் இயம்பிப் “போர் புரியேன் “ என்று பேசாதிருந்துவிட்டான்.
Sanjaya said :
O King, having thus spoken to Sri Krishna, Arjuna again said to him, “ I will not fight “ and became silent.


Chapter 2 : Verse : 10

तमुवाच हृषीकेश : प्रहसन्निव भारत |
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वच : ||
தமுவாச ஹ்ருஷீகேச : ப்ரஹஸன்னிவ பாரத |
ஸேனயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச : ||

த்ருதராஷ்டிரா, இரண்டு சேனைகளுக்குமிடையில் இன்னற்படுகிற அர்ஜுனனுக்கு இன்முருவல் பூத்தவராய் ஹ்ருஷீகேசன் இம்மொழிகளை இயம்பினார்.
Then, O Dhrutharaashtra, Sri Krishna, as if smiling addressed the following words to sorrowing Arjuna, in the midst of the armies.

 

 

🌷🌷🌷🌷🌷



 






கீதா ஜெயந்தி : இந்த புனித நாளின் தேதி, முக்கியத்துவம், சடங்குகளை அறிந்து கொள்ளுங்கள்

 கீதா ஜெயந்தி : இந்த புனித நாளின் தேதி, முக்கியத்துவம், சடங்குகளை அறிந்து கொள்ளுங்கள்
 
 


 

 

 கீதா ஜெயந்தி என்பது குருஷேத்திர போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு புனித இந்து வேதமான பகவத் கீதை பேசப்பட்ட நாளைக் குறிக்கும் ஒரு வருடாந்திர கொண்டாட்டமாகும். 

இந்த நாள் இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் சுக்ல ஏகாதசியில் வருகிறது. பகவத் கீதையின் ஸ்லோகங்களைப் படிப்பதன் மூலமும், பாராயணம் செய்வதன் மூலமும், சத்சங்கங்களை (ஆன்மீக சொற்பொழிவுகள்) ஏற்பாடு செய்வதன் மூலமும், தொண்டு நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமும் பக்தர்கள் கீதா ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். கீதையின் போதனைகளை சிந்தித்து, கடமை, அறம் மற்றும் ஆன்மீக உணர்தலுக்கான பாதையை வலியுறுத்தும் நாள் இது.


பகவான் கிருஷ்ணர் தனது அன்பு பக்தனான அர்ஜுனனுக்கும் மனிதகுலத்திற்கும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பக்தி சேவையின் மிக மேம்பட்ட மற்றும் ரகசிய அறிவை பகவத் கீதை வடிவில் வழங்கினார். இறைவனின் திருவடிகளில் சரணடைவதே வாழ்வின் இறுதி நோக்கம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள இந்த வெளிப்பாடு உதவியது.


பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு அனைத்து வகையான ஆன்மீக மற்றும் பௌதிக வழிகாட்டுதல்களையும் வழங்கும் போது, பகவான் கிருஷ்ணர் கர்மா, ஆன்மா, பரமாத்மா, யோகாவின் குறிக்கோள், நமது ஆன்மாவிற்கும் நமது ஜடத்திற்கும் இடையிலான வேறுபாடு, நமது சுற்றுச்சூழல் நம் உணர்வை எவ்வாறு பாதிக்கிறது, வாழ்க்கையின் பரிபூரணத்தை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றி பேசுகிறார்.


கீதா ஜெயந்தி தேதி:
மோட்சத ஏகாதசி அன்று கீதா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

 

இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கீதா ஜெயந்தி வருகிறது.


தனிமுறைச் சிறப்பு:
வாழ்க்கையின் அர்த்தத்தையும், தன்னை எவ்வாறு சரணடைவது என்பதையும் அனைத்து பக்தர்களுக்கும் புரிந்து கொள்ள உதவும் வகையில், முழுமுதற் கடவுள் பகவத் கீதை, அவரது மிக விலைமதிப்பற்ற பக்தர் அர்ஜுனன் மற்றும் பிற மனிதகுலத்திற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு, குருக்ஷேத்திர போர்க்களத்தில் இந்த நாளில் பக்தி சேவையின் மிகவும் மேம்பட்ட மற்றும் ரகசிய அறிவை வழங்கினார்.


கீதா ஜெயந்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
1. பக்தர்கள் மோட்சத ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, பிரம்ம முகூர்த்தத்தின் போது விரதத்தைத் தொடங்குவார்கள்.
2. மக்கள் தானியங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்த்து, பழங்கள், வேர்கள் மற்றும் பால் போன்ற சாத்வீக உணவுகளை உட்கொள்கிறார்கள்.
3. பகவத் கீதையை ஒரு அத்தியாயமாவது படியுங்கள்.
4. கோயில்களுக்குச் சென்று கிருஷ்ணரை வழிபடுங்கள்.
5. நீங்கள் ஹரியானாவில் இருந்தால், குருஷேத்ராவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.
6. பகவானின் திருநாமங்களை அதிகமாக உச்சரித்து, பக்தி சேவைகளில் ஈடுபடுங்கள்.

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...