Bhagavat Gita Chapter 2 - Sloka 1 to 10
Chapter 2 : Verse : 1
द्वितीयोऽध्याय :
सांख्ययोग :
सञ्जय उवाच
तं तथा कृपयाऽऽविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् |
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन : ||
இரண்டாம் அத்தியாயம்
ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயா ऽऽவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம் |
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதன : ||
ஸஞ்ஜயன் சொன்னது :
அங்ஙனம் இரக்கம் ததும்பி, கண்களில் நீர் நிறைந்து, பார்வை குறைந்து துக்கப்பட்ட
அர்ஜுனனுக்கு, மதுஸூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்.
Sanjaya said :
Seeing Arjuna, full of compassion, his mind depressed, his eyes full of tears, Madhusudana, Krishna, spoke
the following words.
Chapter 2 : Verse : 2
श्री भगवानुवाच
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् |
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ||
ஸ்ரீ பகவான் உவாச
குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் |
அனார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுன ||
ஸ்ரீ பகவான் சொன்னது :
அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான
இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?
The Supreme said :
Arjuna, how have these impurities come upon in your mind, at this time of crisis ? They are not at all befitting
a man who knows the value of life. They lead not to higher planets but to infamy.
Chapter 2 : Verse : 3
क्लैब्यं मा स्म गम : नैतत्त्वय्युपपद्यते |
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ||
க்லைப்யம் மா ஸ்ம கம : நைதத்த்வய்யுபபத்யதே |
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்தோத்திஷ்ட பரந்தப ||
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே,
இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.
O son of Partha, do not yield to this degrading impotence. It does not you. Give up such petty weakness of heart and
arise, O chastiser of the enemy.
Chapter 2 : Verse : 4
अर्जुन उवाच
कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन |
इषुभि : प्रतियोत्स्यामि पूजर्हावरिसूदन ||
கதம் பீஷ்மமஹம் சங்க்யே த்ரோணம் ச மதுஸூதன |
இஷுபி : ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதன ||
அர்ஜுனன் சொன்னது
பகைவரைத் தொலைப்பவரே, மது என்ற அரக்கனைக் கொன்றவரே, போற்றுதர்க்குரிய
பீஷ்மரையும், த்ரோணரையும் நான் எங்ஙனம் போரில் எதிர்த்துப் பாணங்களால் போர்புரிவேன்?
Arjuna said :
O killer of enemies, O killer of Madhu, how can I counterattack with arrows in battle, men like Bhishma and Drona,
who are worthy of my worship?
Chapter 2 : Verse : 5
हत्वाऽर्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान् ||
குரூனஹத்வா ஹி மஹானுபாவான் ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே |
ஹத்வாऽர்தகாமாம்ஸ்து குரூனிஹைவ புஞ்ஜீய போகான்ருதிரப்ரதிக்தான் ||
மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல் இவ்வுலகில் பிக்ஷையேற்று உண்பதும்
சாலச்சிறந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும் போகத்தையும்
இம்மையிலேயே அனுபவிப்பவனாவேன்.
It would be better to live in this world by begging than to live at the cost of the lives of great souls who are my teachers.
Even though desiring worldly gain, they are superiors. If they are killed, everything we enjoy will be tainted with blood.
Chapter 2 : Verse : 6
न चैतद्विद्म : कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा जयेयु : |यानेन हत्वा न जिजीविषामस्तेऽवस्थिता : प्रमुखे धार्तराष्ट्रा : ||
ந சைதத்வித்ம : கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா ஜயேயு : |
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்திதா : ப்ரமுகே தார்தராஷ்ட்ரா : ||
நாம் இவர்களை ஜயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பது – இதில் நமக்கு எது மேலானது என்பது
விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அத்தகைய
த்ருதராஷ்ட்ரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர்.
We don’t know which is better- conquering them or being conquered by them. By killing whom we will not be happy
to live, the sons of Drutharaashtra, are now standing before us on the battlefield.
Chapter 2 : Verse : 7
कार्पण्यदोषोपहतस्वभाव: पृच्छामि त्वां धर्मसम्मूढचेता : |यच्छ्रेय : स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ||
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ :
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: |
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேऽஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் ||
சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப்
பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன். எனக்குச் சிறப்பீனுவதை உறுதியாக
இயம்பும்; நான் உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன், உபதேசித்தருளும்.
Now I am confused about my duty and have lost all composure because of miserly weakness. In this condition, I am asking You to tell me for certain what is best for me. Now I am Your disciple, and a soul surrendered unto You. Please instruct me.
Chapter 2 : Verse : 8
न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् |
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम् ||
ந ஹி ப்ரபஸ்யாமி மமாபனுத்யாத்யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் |
அவாப்ய பூமாவஸபத்னம்ருத்தம் ராஜ்யம் சுராணாமபி சாதிபத்யம் ||
பூமியில் நிகரற்றதும், ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும், அமரர்க்கு அதிபதியாயிருக்கப்பெரிமனும், என் புலன்களைப் பொசுக்குகின்ற
துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
For even on obtaining undisputed sovereignty and an affluent kingdom on this earth and lordship over the gods, I do not see any means that can drive away the grief which is drying up my senses.
Chapter 2 : Verse : 9
सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेश : परन्तप : |
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह ||
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச : பரந்தப : |
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ ||
ஸஞ்ஜயன் சொன்னது :
பகைவனைப் பொசுக்கும் குடாகேசனாகிய அர்ஜுனன் ஹ்ருஷீகேசனாகிய கோவிந்தனுக்கு இங்ஙனம் இயம்பிப் “போர் புரியேன் “ என்று பேசாதிருந்துவிட்டான்.
Sanjaya said :
O King, having thus spoken to Sri Krishna, Arjuna again said to him, “ I will not fight “ and became silent.
Chapter 2 : Verse : 10
तमुवाच हृषीकेश : प्रहसन्निव भारत |
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वच : ||
தமுவாச ஹ்ருஷீகேச : ப்ரஹஸன்னிவ பாரத |
ஸேனயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச : ||
த்ருதராஷ்டிரா, இரண்டு சேனைகளுக்குமிடையில் இன்னற்படுகிற அர்ஜுனனுக்கு இன்முருவல் பூத்தவராய் ஹ்ருஷீகேசன் இம்மொழிகளை இயம்பினார்.
Then, O Dhrutharaashtra, Sri Krishna, as if smiling addressed the following words to sorrowing Arjuna, in the midst of the armies.
🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment