Tuesday, May 28, 2024

Bhagavat Gita Chapter 2 - Sloka 11 to 20

 

 

 Bhagavat Gita Chapter 2 - Sloka 11 to  20

 



Chapter 2 :
Verse : 11

श्री भगवानुवाच
अशोच्यानन्वशोचस्त्वं प्र ज्ञावादांश्च भाषसे |
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिता : ||
ஸ்ரீ பகவான் உவாச
அசோச்யானன்வசோசஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே |
கதாஸூனகதாஸூன்ஸ்ச நானுசோசந்தி பண்டிதா : ||

ஸ்ரீ பகவான் சொன்னது :
துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயருருகிறாய். ஞானியரது நல்லுரையும் நவில்கிறாய்.  இறந்தார்க்கோ இருப்பார்க்கோ புலம்பார் பண்டிதர்.
Sri Bhagavan Said :
Arjuna, you grieve over those who should not be grieved for and yet speak like learned. Wise men do not sorrow over the dead or the living.


Chapter 2 : Verse : 12

न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपा : |
न चैव न भविष्याम : सर्वे वयमत : परम् ||
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜனாதிபா : |
ந சைவ ந பவிஷ்யாம : ஸர்வே வயமத : பரம் ||

முன்பு எப்பொழுதாவது நான், நீ, இவ்வரசர்கள் ஆகியவர்களில் யாராவது இல்லாதிருந்ததில்லை. இக்காயங்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற் போகமாட்டோம்.
Never was there a time when I did not exist, nor you, nor all these kings; nor in the future shall any of us cease to be.


Chapter 2 : Verse : 13

 

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा |
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ||
தேஹினோऽஸ்மின்யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா |
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி ||

ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும், யௌவனமும், மூப்பும் உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது. தீரன் அதன் பொருட்டு மயங்கான்.
Just as boyhood, youth and old age are attributed to the soul through this body, even so it attains another body. The wise man does not get deluded about this.


Chapter 2 : Verse : 14 

 मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदु:खदा : |
आगमापायिनो ऽनित्यास्तांस्तितिक्षस्व भारत  ||
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ணஸுகது:கதா : |
ஆகமாபாயினோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத ||

குந்தியின் மைந்தா, பொறிகள் புலங்களிடத்துப் பொருந்துதலால் குளிர் வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் நிலையாமயும் அவைகளின் இயல்பு. அவைகளைப் பொருத்துக்கொள்.
O son of Kunti, the nonpermanent appearance of happiness and distress, and their disappearance in due course, are like the appearance and disappearance of winter and summer seasons. They arise from sense perception. O scion of Bharata, one must learn to tolerate them without being disturbed.




Chapter 2 : Verse : 15

यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ |
समदु:खसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ||
யம் ஹி வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப |
ஸமது:கஸுகம் தீரம் சோ ऽம்ருதத்வாய கல்பதே ||

புருஷ ஸ்ரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறான், இன்பதுன்பங்களை ஒப்பாக உணர்கிறான், அத்தீரனே சாகா நிலைக்குத் தகுந்தவனாகிறான்.
Arjuna, the wise man to whom pain and pleasure are alike, and who is not tormented by these contacts, becomes eligible for liberation.

 

 Chapter 2 : Verse : 16

नासतो विद्यते भावो नाभावो विद्यते सत : |
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्वदर्शिभि : ||
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத : |
ஊபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வனயோஸ்தத்வதர்சிபி : ||

இல்லாததற்கு இருப்புக்கிடையாது. இருப்பது இல்லாமற்போவதுமில்லை. உண்மையையறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும்.
The unreal has no existence, and the real never ceases to be, the reality of both has thus been perceived by the seers of truth.


Chapter 2 : Verse : 17

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् |
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ||
அவிநாசி து தத்வித்தி யேன ஸர்வமிதம் ததம் |
விநாசமவ்யயஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி ||

உலகெல்லாம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக. அழியாப்பொருளை அழிக்க யாருக்கும் இயலாது.
That which pervades the entire body, you should know to be indestructible. No one is able to destroy that imperishable soul.

Chapter 2 : Verse : 18

 

अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता : शरीरिण : |
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ||
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா : சரீரிண  : |
அநாசினோ ऽப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத ||

நித்தியமாய், நாசமற்றதாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் இவ்வுடல்கள் யாவும் அழியும் தன்மையனவாம். ஆதலால் பாரதா, போர் புரிக.
The material body of the indestructible, immeasurable and eternal living entity is sure to come to an end; therefore, fight, O descendant of Bharata.

 

Chapter 2 : Verse : 19

 

य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् |
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ||
ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் |
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ||

யார் இந்த ஆத்மாவை கொல்லுகிறவனென்று அறிகிறானோ இன்னும் யார் இந்த ஆத்மாவை கொல்லப்பட்டவன் என்று நினைக்கிறானோஅவ்விருவரும் அறிந்தவர்களல்லர் இவ்வாத்மா கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை.
Both of them are ignorant, he who knows the soul to be capable of killing and he who takes it as killed, for verily the soul neither kills, nor is killed.


Chapter 2 : Verse : 20

न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूय : |
अजो नित्य : शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ||
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய : |
அஜோ நித்ய : சாஸ்வதோऽயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே ||

இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று. [இருந்து பிறகு இறந்து போவதன்று] இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. காயம் கொல்லப்படுமிடத்தும் ஆத்மா கொல்லப்படுவதில்லை.
The soul is never born nor dies; nor does it become only after being born. For it is unborn, eternal, everlasting and ancient; even though the body is slain, the soul is not.

 

 

🌷🌷🌷🌷🌷



 







No comments:

Post a Comment

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...