Bhagavat Gita Chapter 2 - Sloka 21 to 30
Chapter 2 : Verse : 21
वेदाऽविनाशिनं नित्यं य एनमजमव्ययम् |
कथं स पुरुष : पार्थ कं घातयति हन्ति कम् ||
வேதா ऽவிநாசினம் நித்யம் ய ஏனமஜமவ்யயம் |
கதம் ஸ புருஷ : பார்த்த கம் காதயதி ஹந்தி கம் ||
பார்த்தா, இவ்வாத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக்கொல்விப்பான் ?
O Partha, how can a person who knows that the soul is indestructible, eternal, unborn and immutable, kill anyone or cause anyone to kill ?
Chapter 2 : Verse : 22
वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरो ऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा –
न्यन्यानि संयाति नवानि देही ||
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோऽபராணி |
ததா சரீராணி விஹாய ஜீர்ணா-
ன்யன்யானி ஸம்யாதி நவானி தேஹி ||
பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக் கொள்வது போன்று ஆத்மா பழைய உடல்களை நீத்துப் புதியன புகுகிறது.
As a man shedding worn-out garments, takes other new ones, likewise the embodied soul, casting off worn-out bodies, enters into others which are new.
Chapter 2 : Verse : 23
नैनं छिदन्ति शस्त्राणि नैनं दहति पावक : |
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुत : ||
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக : |
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத : ||
ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டாது, தீ அதை எரிக்காது, நீர் நனைக்காது, காற்று அதை உலர்த்தாது.
Weapons cannot cut it nor can fire burn it; water cannot wet it nor can wind dry it.
Chapter 2 : Verse : 24
अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च |
नित्य : सर्वगत : स्थाणुरचलोऽयं सनातन : ||
அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽசோஷ்ய ஏவ ச |
நித்ய : ஸர்வகத : ஸ்தாணுரசலோऽயம் ஸநாதன : ||
இவ்வாத்மா வெட்டுண்ணான்; வேகான்; நனையான்; உலரான். இவன் நித்தியமாய், நிலையாய், அசைவற்றவனாய் என்றுமிருப்பான்.
This Soul is unbreakable and insoluble, and can neither burned nor dried. He is everlasting, omnipresent, unchangeable, immovable and ever lasting.
Chapter 2 : Verse : 25
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ||
அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே |
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமர்ஹஸி ||
இவ்வாத்மா பொறிகளுக்குத் தென்படாதவன், சிந்தனைக்கு எட்டாதவன், மாறுபடாதவன் எனப்படுகிறான். ஆத்மாவை இங்ஙனம் அறிந்து துன்பத்தை அகற்று.
This soul is unmanifest; it is unthinkable; and it is spoken of as immutable. Therefore, knowing this as such, you should not grieve.
Chapter 2 : Verse : 26
अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् |तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि ||
அத சைனம் நித்யஜாதம் நித்யம் வா மன்யஸே ம்ருதம் |
ததாபி த்வம் மஹாபாஹோ நைனம் சோசிதுமர்ஹஸி ||
ஓருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறானென்று எண்ணுவாயானால், பெருந்தோளுடையாய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது.
If, however, you think that the soul is always born and dies forever, you still have no reason to lament, O mighty-armed.
Chapter 2 : Verse : 27
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च |तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ||
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச |
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் சோசிதுமர்ஹஸி ||
பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் உருதியெனில், விலக்கமுடியாத விஷயத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது.
One who has taken his birth is sure to die, and after death one is sure to take birth again. Therefore, you should not lament for things which is unavoidable.
Chapter 2 : Verse : 28
अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत |
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ||
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத |
ஆவ்யக்தநிதனான்யேவ தத்ர கா பரிதேவனா ||
பாரதா, உயிர்கள் துவக்கத்தில் தோன்றாமலும், இடையில் தோன்றியும், இறுதியில் தோன்றாமலும் இறுக்கின்றன. இதைக் குறித்து வருந்துவானேன்?
O Bharata, all created beings unmanifest in their beginning, manifest in their interim state, and unmanifest again when annihilated. So what is the need there for lamentation?
Chapter 2 : Verse : 29
आश्चर्यवत्पश्यति कश्चिदेन-
माश्चर्यवद्वदति तथैव चान्य : |
आश्चर्यवश्चैनमन्य : शृणोति
श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ||
ஆச்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேன-
மாச்சர்யவத்வததி ததைவ சான்ய : |
ஆச்சர்யவச்சைனமன்ய : ஸ்ருணோதி
ஸ்ருத்வாப்யேனம் வேத ந சைவ கஸ்சித் ||
ஒருவன் இவ்வாத்மாவை ஆச்சர்யமானது போல் காண்கிறான், அங்ஙனமே இன்னொருவன் ஆச்சர்யம் போல் பேசுகிறான், வேரொருவன் இவ்வாத்மாவை ஆச்சர்யம் போல் கேட்கிறான், மற்றும் ஒருவன் கேட்டாலும் இவ்வாத்மாவை அறிகிறதேயில்லை.
Some look on the soul as amazing, some describe him as amazing, and some hear of him as amazing, while others, even after hearing about him, cannot understand him at all.
Chapter 2 : Verse : 30
देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत |
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ||
தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே சர்வஸ்ய பாரத |
தஸ்மாத்சர்வாணி பூதானி ந த்வம் சோசிதுமர்ஹஸி ||
பாரதா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்.
O descendant of Bharata, he who dwells in the body can never be slain. Therefore, you need not grieve for any living being.
🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment