Bhagavat Gita Chapter 2 - Sloka 31 to 40
Chapter 2 : Verse : 31
स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि |
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते ||
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி |
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽன்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே ||
ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது. அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை.
Considering your specific duty as kshatriya, you should know that there is no better engagement for you than fighting on religious principles; and so there is no need for trembling.
Chapter 2 : Verse : 32
यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् |
सुखिन : क्षत्रिया : पार्थ लभन्ते युद्धमीदृशम् ||
யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம் |
ஸுகின : க்ஷத்ரியா : பார்த லபந்தே யுத்தமீத்ருசம் ||
பார்த்தா, தற்செயலாய் நேர்ந்ததும் திறந்த சுவர்க்க வாயில் போன்றதுமான இந்த யுத்தத்தை பாக்கியவான்களாகிய க்ஷத்ரியர்களே அடைகிறார்கள்.
O Partha, happy are the kshatriyas to whom such fighting opportunities come unsought, opening for them the doors of the heavenly planets.
Chapter 2 : Verse : 33
अथ चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि |
तत : स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि ||
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸ்ங்க்ராமம் ந கரிஷ்யஸி |
தத : ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||
அறப்போர் ஆகிய இதனை செய்யாமற் போவாயாகில் நீ ஸ்வதர்மத்தையும் கீத்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்.
If however, you do not perform your religious duty of fighting, then you will certainly incur sins for neglecting your duties and thus lose your reputation as a fighter.
Chapter 2 : Verse : 34
अकीर्तिञ्चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् |
संभावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ||
அகீர்திஞ்சாபி பூதானி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம் |
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே ||
இன்னும் உயிர்கள் உன்னைப்பற்றி யாண்டும் அபகீர்த்தியை பேசுவார்கள். போற்றுதலுக்குரிய ஒருவனுக்கு அபகீத்தியானது மரணத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
People will always speak of your infamy, and for a respectable person, dishonour is worse than death.
Chapter 2 : Verse : 35
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ||
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா : |
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் ||
பயத்தால் போரினின்று நீ பின்வாங்கினாயென்று மஹாரதிகர்கள் எண்ணுவார்கள். எவர்பால் நீ பெருமை பெற்றிருந்தாயோ, அவர்பால் சிறுமையுருவாய்.
The great generals who have highly esteemed your name and fame will think that you have left the battlefield out of fear only, and thus they will consider you insignificant.
Chapter 2 : Verse : 36
अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिता : |निन्दन्तस्तव सामर्थ्यं ततो दु:खतरं नु किम् ||
அவாச்யவாதாம்ஸ்ச ப்ஹூன்வதிஷ்யந்தி தவாஹிதா : |
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ துக்கதரம் நு கிம் ||
உன்னுடைய சத்துருக்கள் உன்னுடைய சாமர்த்தியதை நிந்திக்கிரவர்களாக பல சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்லுவார்கள். அதைக்காட்டிலும் பெருந்துன்பம் யாது உளது ?
Your enemies will describe you in many unkind words and scorn your ability. What could be more painful for you ?
Chapter 2 : Verse : 37
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् |तस्मादुत्तिष्ट कौन्तेय युद्धाय कृतनिश्चय : ||
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் |
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய : ||
போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய், வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய். ஆகையால் கௌந்தேய, போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு.
O son of Kunti, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with the determination and fight.
Chapter 2 : Verse : 38
सुखदु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ |
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ||
ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ |
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||
இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச்
சமனாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.
Do thou fight for the sake of fighting, without considering happiness or distress, loss or gain, victory or defeat- and by doing so, you shall never incur sin.
Chapter 2 : Verse : 39
एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगेत्विमां शृणु |
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ||
ஏஷா தேऽபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகோத்விமாம் ஸ்ருணு |
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி ||
ஆத்ம தத்துவத்தைப்பற்றிய அறிவு உனக்குப் புகட்டப்பட்டது. இனி பார்த்தா, யோகத்தைப் பற்றிக் கேள். யோகபுத்தியைப் பெறுவாயாகில், நீ கர்மபந்தத்திலிருந்து விடுபடுவாய்.
Arjuna, this attitude of mind has been presented to you from the point of view of jnanayoga, now hear the same as presented from the standpoint of karmayoga [the yoga of selfless action ]. Equipped with this attitude of mind, you can free yourself completely from the bondage of karma.
Chapter 2 : Verse : 40
नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते |
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् |
நேஹாபிக்ரமநாசோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே |
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ||
இதில் செய்யும் முயற்சி வீண்போதல் இல்லை. குற்றமொன்றும் வராது. இதைச் சிறிது பழகினும் பெரும் பயத்தினின்று {பிறப்பு இறப்பு } இது காப்பாற்றும்.
In this path [selfless action] there is no loss of effort, nor there is fear of contrary result, even a little practice of this discipline saves one from the fear of birth and death.
🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment