Tuesday, May 28, 2024

Bhagavat Gita Chapter 2 - Sloka 41 to 50

 

 

 Bhagavat Gita Chapter 2 - Sloka 41 to  50

 



Chapter 2 :
Verse : 41
 

व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन |
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ||
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தன |
பஹுசாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயினாம் ||

குருகுலத்துதித்தோய், இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்குப் புத்தியானது ஒன்றேயாம். உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளையுடையனவும் முடிவற்றவைகளுமாம்.
Arjuna, in this yoga [of selfless action ] the intellect is determinate and directed towards one ideal; whereas the intellect of the undecided [ignorant men moved by desires] wanders in all directions, after innumerable aims.


Chapter 2 : Verse : 42 - 44



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चित : |
वेदवादरता : पार्थ नान्यदस्तीतिवादिन : ||
कामात्मान : स्वर्गपरा : जन्मकर्मफलप्रदाम् |
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ||
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् |
व्यवसायात्मिका बुद्धि : समाधौ न विधीयते ||


யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித : |
வேதவாதரதா : பார்த நான்யதஸ்தீதிவாதின : ||
காமாத்மான : ஸ்வர்கபரா : ஜன்மகர்மபலப்ரதாம் |
க்ரியாவிசேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி ||
போகைஸ்வர்யப்ரசக்தானாம் தயாபஹ்ருதசேதஸாம் |
வ்யவஸாயாத்மிகா புத்தி : ஸமாதௌ ந விதீயதே ||

பார்தா, வேதமொழியில் விருப்பமுடையவர்கள், சுவர்கத்தை விளைவிக்கின்ற கருமத்திற்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பவர்கள், காமம் நிறைந்தவர்கள், சுவர்கமே முடிவான பேறு என்பவர்கள்- இத்தகைய அவிவேகிகளுடைய புஷ்பாலங்காரமான வசனத்தைக்கேட்டு அறிவு கலங்கப் பெறுபவர்க்கும், போக ஐசுவரியத்தில் பற்றுடையவர்க்கும் உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை. அவர்களுடைய புஷ்பாலங்காரமான சொற்கள் போக ஐசுவரியத்தைப் பெறுவதற்கான காமிய கரும விசெஷங்கள் நிறைந்தனவாயும் புதிய பிறவிகளை உண்டுபண்ணுவனவாயும் இருக்கும்.


Arjuna, those who are full of worldly desires and devoted to the letter of Vedas, who look upon heaven, as the supreme goal and argue that there is nothing beyond heaven are unwise. They utter flowery speech recommending many rituals of various kinds for attainment of pleasure and power with rebirth as their fruit. Those whose minds are carried away by such words, and who are deeply attached to pleasure and worldly power, cannot attain the determinate intellect concentrated on God.

 

There are three slokas
Only by reading the meaning of these three slokas will give the collective understanding of the slokas otherwise it will be ubrupt



Chapter 2 : Verse : 45

 

त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन |
निर्द्वन्द्वो नित्यसत्वस्थो निर्योगक्षेम आत्मवान् ||
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன |
நிர்த்வந்த்வோ நித்யஸத்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான் ||

அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள்.
நீ இருமைகளின்று விடுபட்டு, எப்பொழுதும் நடுவு நின்று, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக.
Arjuna, the vedas thus deal with the evolutes of the three Gunas[modes of prakruti], viz, worldly enjoyments and the means of attaining such enjoyments; be thou indifferent to these enjoyments and their means, rising above pairs of opposites like pleasure and pain etc; established in the eternal Existence [God], absolutely unconcerned about the supply of wants and the preservation of what has been already attained and selfcontrolled.

 

 
Chapter 2 : Verse : 46

यावानर्थ उदपाने सर्वत : संप्लुतोदके |
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत : ||
யாவானர்த்த உதபானே ஸர்வத : ஸம்ப்லுதோதகே |
தாவான்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத : ||

எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன்படுகிறவளவு, ஞானத்தையுடைய பிரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன்படுகின்றன .
All purposes served by a small well can at once be served by great reservoir of water. Similarly, all the purpose of the Vedas can be served to one who knows the purpose behind him.




Chapter 2 : Verse : 47

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன |
மாகர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி ||

கர்மத்தில் மட்டிலும் உனக்கு அதிகாரமுண்டு. ஒருபோதும் பலன்களில் இல்லை. கர்மபலன்களை உண்டுபண்ணுபவன் ஆகாதே. கர்மம் செய்யாதிருப்பதில் உன்னுடைய பற்றுதல் இருக்கலாகாது.
You have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your actions, and never be attached to not doing your duty.

 Chapter 2 : Verse : 48

योगस्थ : कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय |
सिद्ध्यसिद्ध्यो : समो भूत्वा समत्वं योग उच्यते ||
யோகஸ்த : குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய |
ஸித்த்யஸித்த்யோ : ஸமோ பூத்வா சமத்வம் யோக உச்யதே ||

தனஞ்ஜயா, யோகத்தில் நிலைபெற்று, பற்று அற்று, வெற்றி தோல்விகளைச் சமமாகக்கொண்டு, கருமம் செய். நடுவுநிலை யோகம் என்று சொல்லப்படுகிறது.
Arjuna, perform your duties established in yoga, renouncing attachment, and even-tempered in success and failure; evenness of temper is called Yoga.


Chapter 2 : Verse : 49

दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय |
बुद्धौ शरणमन्विच्छ कृपणा : फलहेतव : ||
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தனஞ்ஜய |
புத்தௌ சரணமன்விச்ச க்ருபணா : பலஹேதவ : ||

சமபுத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல் புரிவது மிகக் கீழானதே. சமபுத்தியின்கண் சரணடைக. பயன் கருதுபவர் கயவர் ஆவர்.
O Dhananjaya, keep all abominable activities far distant by devotional service, and in that consciousness surrender unto the Lord. Those who want to enjoy the fruits of their work are misers.

Chapter 2 : Verse : 50

 

बुद्धियुक्तो जहानीह उभे सुकृतदुष्कृते |
तस्माद्योगाय युज्यस्व योग : कर्मसु कौशलम् ||
புத்தியுக்தோ ஜஹாநீஹ உபே சுக்ருத துஷ்க்ருதே |
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக : கர்மஸு கௌசலம் ||

சமபுத்தியுடையவன் நன்மை தீமை இரண்டையும் இம்மையில் துறக்கிறான். ஆகையால் நீ யோகத்தைச் சார்ந்திடு. யோகம் கர்மங்களில் வல்லமை ஆகும்.
A man endowed with equanimity rids himself of both good and bad actions even in this life. Therefore strive for yoga, which is the art of all work.

 

 

🌷🌷🌷🌷🌷



 










No comments:

Post a Comment

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...