Bhagavat Gita Chapter 3 - Sloka 1 to 10
Chapter 3 : Verse : 1
तृतीयोध्याय :
कर्म योग :
अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन |
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ||
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜனார்தன |
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ ||
ஆர்ஜுனன் சொன்னது :
ஜனார்தனா, கேசவா, கர்மத்தைவிட ஞானமானது சிறந்ததென்பது உம்மால் மதிக்கபடுகிறதானால், அப்பொழுது ஏன் பயங்கரமான கர்மத்தில் என்னை ஈடுபடுத்துகிறீர்?
Arjuna said:
O Janaardana, O Kesava, why do You want to engage me in this ghastly warfare, if You think that knowledge is better than fruitive work?
Chapter 3 : Verse : 2
व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे |
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ||
வ்யாமிஸ்ரேணேவ வாக்யேன புத்திம் மோஹயஸீவ மே |
ததேகம் வத நிஸ்சித்ய யேன ஸ்ரேயோऽஹமாப்னுயாம் ||
முரண்படுவனபோன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகின்றீர் போலும். நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்.
You are, as it were, puzzling my mind by these seemingly involved expressions; therefore, tell me definitely the one discipline by which I may obtain the highest good.
Chapter 3 : Verse : 3
श्री भगवानुवाच
लोकेऽस्मिन्द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् ॥
ஸ்ரீ பகவானுவாச
லோகேऽஸ்மின்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக |
ஞானயோகேன ஸாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம் ||
ஸ்ரீ பகவான் சொன்னது :
பாபமற்றவனே, இவ்வுலகில் தத்வ விசாரம் செய்பவர்களுக்கு ஞானயோகம் என்றும், அதை அனுஷ்டிப்பவர்களுக்கு கர்மயோகம் என்றும், இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப்பட்டிருக்கின்றன.
Sri Bhagavan said:
O sinless Arjuna, in this world two courses of Sadhana [spiritual discipline] have been enunciated by Me in the past. In the case of Sankyayogi, the Sadhana proceeds along the path of knowledge; whereas in the case of Karmayogi, it proceeds along the path of Action.
Chapter 3 : Verse : 4
न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते |
न च संन्यसनादेव सिद्धिं समधिगच्छति ||
ந கர்மணாமனாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஶோऽஸ்னுதே |
ந ச ஸ்ந்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ||
புருஷன் கருமங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மமற்ற நிலையை [ஆத்ம சொரூபத்தை] அடைவதில்லை; வெரும் சன்யாசத்தால் மட்டுமே அவன் நிறை நிலையை [சித்தியை] பெறுவதுமில்லை.
Not by merely abstaining from work can one achieve freedom from action, nor by renunciation alone can one attain perfection.
Chapter 3 : Verse : 5
कार्यते ह्यवश : कर्म सर्व : प्रकृतिजैर्गुणै : ||
ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் |
கார்யதே ஹ்யவச : கர்ம ஸர்வ : ப்ரக்ருதிஜைர்குணை : ||
யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாது இருப்பதில்லை. ஏனென்றால் பிரக்ருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றிக் கர்மமானது செய்விக்கப்படுகின்றது.
Surely none can ever remain inactive even for a moment; for, everyone is helplessly driven to action by nature-born qualities.
Chapter 3 : Verse : 6
कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् |इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचार : स उच्यते ||
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் |
இந்த்ரியார்தான்விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே ||
கர்மேந்த்ரியங்களை அடக்கி, இந்த்ரிய விஷயங்களை மனதால் எண்ணிக்கொண்டிருக்கும் மூடன், பொய்யொழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
He who outwardly restraining the organs of senses and action, sits mentally dwelling on the objects of senses, that man of deluded intellect is called a hypocrite.
Chapter 3 : Verse : 7
यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन |कर्मेन्द्रियै : कर्मयोगमसक्त : स विशिष्यते ||
யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேऽர்ஜுன |
கர்மேந்த்ரியை : கர்மயோகமஸக்த : ஸ விஸிஷ்யதே ||
அர்ஜுனா, ஆனால் இந்த்ரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று, கர்மேந்த்ரியங்களைக்கொண்டு கர்மயோகத்தை ஆரம்பிக்கிறானோ அவன் சிறந்தவன்.
On the other hand, he who controlling the organs of sense and action by the power of his will, and remaining unattached, undertakes the Yoga of Action through those organs, Arjuna, he excels.
Chapter 3 : Verse : 8
नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मण : |
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मण : ||
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : |
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண : ||
நித்திய கர்மத்தை நீ செய். ஏனெனில், கர்மம் செய்யாததைவிட கர்மம் செய்வது சிறந்து. கர்மம் செய்யாதிருப்பதனால் உன்னுடைய உடலைப்பேணுவதும் கூட சாத்தியமாகாது.
Therefore, do perform your allotted duty; for action is superior to inaction. Desisting from action,you cannot even maintain your body.
Chapter 3 : Verse : 9
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धन : ।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्ग : समाचर ॥
யஞார்தாத்கர்மணோऽன்யத்ர லோகோऽயம் கர்மபந்தன : |
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க : ஸமாசர ||
யக்ஞகர்மம் தவிர [சுயநலமற்ற செயலைத்தவிர] மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நங்கு இயற்று.
Man is bound by his own action except when it is performed for the sake of sacrifice. Therefore, Arjuna, perform your duty efficiently, free from attachment, for the sake of sacrifice alone.
Chapter 3 : Verse : 10
सहयज्ञा : प्रजा : सृष्ट्वा पुरोवाच प्रजापति : ।
अनेन प्रसविष्यध्वमेषवोऽस्त्विष्टकामधुक् ॥
ஸஹயஞா : ப்ரஜா : ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி : |
அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷவோऽஸ்த்விஷ்டகாமதுக் ||
சிருஷ்ட்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்து, “இதனால் விருத்தியடையுங்கள்; இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும்” என்று கூறினார்.
Having created mankind along with the spirit of sacrifice at the beginning of creation the Creator, Brahma, said to them,” you shall prosper by this; may this yield the enjoyment you seek”.
🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment