Sunday, September 6, 2026

Bhagavad Gita Chapter 18 – Moksha Sannyasa Yoga | Sanskrit Slokas, Tamil & English Meaning chapter 18 : 51 to 60

 

 

 

Chapter 18 : Verse : 51

बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च |
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ||
புத்யா விசுத்தயா யுக்தோ த்ருத்யாத்மானம் நியம்ய ச |
ஸப்தாதீன்விஷயாஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச ||

தூய அறிவுடன் கூடியவன், உறுதியுடன் தன்னை அடக்கியும், சப்தம் முதலிய இந்திரியங்களைத் துறந்தும், விருப்பு வெறுப்பை விட்டொழித்தும்;
Endowed with purified intellect, subduing the mind with firm resolve, turning away from sound and other objects of the senses, giving up likes and dislikes;

 

 


Chapter 18 : Verse : 52

विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानस: |
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रित: ||
விவிக்தஸேவீ லக்வாசீ யதவாக்காயமானஸ: 
த்யானயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாச்ரித: ||

தனித்திருந்து, உண்டி சுருக்கி, மனம், மொழி, மெய்யை அடக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் திளைத்திருந்து, வைராகியம் பூண்டவனாய்;
living in solitude; eating lightly; controlling the mind, speech, and organs of action; ever absorbed in yoga of meditation; taking refuge in detachment;

 

 

Chapter 18 : Verse : 53

अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् |
विमुच्य निर्मम: शान्तो ब्रह्मभूयाय कल्पते ||
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் |
விமுச்ய நிர்மம: சாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே ||

அகங்காரம், ஆசையின் வலிமை, செருக்கு, காமம், க்ரோதம், உடைமை ஆகியவைகளை நீத்து மமகாரமற்று சாந்தமாயிருப்பவன் பிரம்மமாதற்குத் தகுந்தவன்.
relinquishing egotism, violence, pride, lust, anger, and proprietorship — one becomes peaceful, free from the notion of "I” and “my", and fit for attaining oneness with the Supreme Being.

 

 

Chapter 18 : Verse : 54

ब्रह्मभूत: प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति |
सम: सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ||
ப்ரஹ்மபூத: ப்ரஸன்னாத்மா ந சோசதி ந காங்க்ஷதி |
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் ||

பிரம்ம மயமாகி தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை. எல்லா உயிர்களிடத்தும் சமனாயிருப்பவன் என்மீது மேலாம் பக்தி பெறுகிறான்.
Absorbed in the Supreme Being, the serene one neither grieves nor desires. Becoming impartial to all beings, one obtains My Para-Bhakti, the highest devotional love.

 

 

Chapter 18 : Verse : 55

भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वत: |
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ||
பக்த்யா மாமபிஜானாதி யாவான்யஸ்சாஸ்மி தத்வத: |
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம் ||

பக்தியினால் என்னை யார் என்றும் எத்தன்மையன் எனவும் ஒருவன் உள்ளபடி அறிகிறான். உள்ளபடி அறிந்தபின் என்னை விரைவில் அடைகிறான்.
By devotion one truly understands what and who I am in essence. Having known Me in essence, one immediately merges with Me.

 

 

Chapter 18 : Verse : 56

सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रय: |
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ||
ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாச்ரய: |
மத்ப்ரஸாதாதவாப்னோதி சாஸ்வதம் பதமவ்யயம் ||

எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்த பொழுதும் என்னைச் சரணடைபவன், எனதருளால் சாசுவதமானதும் அழியாததுமாகிய பதத்தை அடைகிறான்.
A Karma-yogi attains the eternal immutable abode, by My grace — even while doing all duties — just by dedicating all action to Me with loving devotion.

 

 

 

Chapter 18 : Verse : 57

चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्पर: |
बुद्धियोगमुपाश्रित्य मच्चित्त: सततं भव ||
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸன்யஸ்ய மத்பர: |
புத்தியோகமுபாச்ரித்ய மச்சித்த: ஸததம் பவ ||

விவேகத்தால் கர்மங்களை எல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் குறியாகக்கொண்டு, புத்தி யோகத்தைச் சார்ந்திருந்து, எப்பொழுதும் சித்தத்தை என்பால் வைப்பாயாக.
Sincerely offer all actions to Me, set Me as your supreme goal, and completely depend on Me. Always fix your mind on Me and resort to Karma-yoga.

 

 

Chapter 18 : Verse : 58

मच्चित्त: सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि |
अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥
மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி |
அத சேத்த்வமஹங்காராந்ந ச்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி ||

சித்தத்தை என்பால் வைத்து எனதருளால் இடைஞ்ஜல்களை எல்லாம் தாண்டிச் செல்வாய். அன்றி அஹங்காரத்தால் கேளாவிட்டால் கேடு அடைவாய்.
When your mind becomes fixed on Me, you shall overcome all difficulties by My grace. But, if you do not listen to Me due to ego, you shall perish.

 

 

Chapter 18 : Verse : 59

यदहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे |
मिथ्यैष व्यवसायते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ||
யதகங்காரமாச்ரித்ய ந யோத்ஸ்ய இதி மன்யஸே |
மித்யைஷ வ்யவஸாயதே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி ||

அஹங்காரம் கொண்டு போர் புரியேனென்று நினைப்பாயாகில் இந்தத் துணிவானது வீணாகும். உன் இயல்பு உன்னைப் போரில் பிணித்திழுக்கும்.
If due to ego you think: I shall not fight, your resolve is vain. Because your own nature will compel you to fight.

 

 

 

Chapter 18 : Verse : 60

स्वभावजेन कौन्तेय निबद्ध: स्वेन कर्मणा |
कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ||
ஸ்வபாவஜேன கௌந்தேய நிபத்த: ஸ்வேன கர்மணா |
கர்தும் நேச்சஸி யன்மோஹாத்கரிஷ்யஸ்யவசோऽபி தத் ||

குந்தியின் மைந்தா, மயக்கத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த வினையினால் கட்டுண்டு, உன் வசமிழந்தவனாய், அதையே நீ செய்வாய்.
O Arjuna, you are controlled by your own nature-born Karmic impressions (or Samskara). Therefore, you shall do — even against your will — what you do not wish to do out of delusion. 

No comments:

Post a Comment

Bhagavad Gita Chapter 18 – Moksha Sannyasa Yoga | Sanskrit Slokas, Tamil & English Meaning chapter 18 : 51 to 60

      Chapter 18 : Verse : 51 बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च | शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च || புத்யா வி...