Sunday, March 31, 2024

Bhagavat Gita Chapter 1 - Sloka 11 to 20


Chapter 1 :
Verse : 11

अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिता : |
भीष्ममेवाभिरक्षन्तु भवन्त : सर्व एव हि ||
அயனேஷு ச சர்வேஷு யதாபாகமவஸ்திதா : |
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த : சர்வ ஏவ ஹி     ||

படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு
எல்லாருமே பீஷ்மரையே காப்பாற்றுக.

All of you must now give full support to Grandfather Bhisma, as you stand at your
Respective strategic points of entrance into the phalanx of the army.



Chapter 1 : Verse : 12

तस्य सन्जनयन् हर्षम् कुरुवृद्ध : पितामह :  |
सिंहनादं विनद्योच्चै: शङखं दध्मौ प्रतापवान् ||
தஸ்ய சஞ்ஜனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ: |
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான் ||

வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார்
அவனுக்கு [துரியோதனனுக்கு] உற்ச்சாகத்தை ஊட்ட உரக்க
ஸிம்ஹநாதம் செய்து சங்கை ஊதினார்.

Then Bhishma, the great valiant grandsire of the Kuru dynasty, the grandfather
Of the fighters, blew his conchshell very loudly, making a sound like the
roar of a lion, giving Duryodhana joy.



Chapter 1 : Verse : 13

 
तत : शङखाश्च भेर्यश्च पणवानकगोमुखा : |
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलो ऽभवत्  ||
தத : சக்ங்காஸ்ச பேர்யஸ்ச பணவானககோமுகா : |
ஸஹஸைவாப்யஹன்யந்த சப்ததுமுலோऽபவத்     ||

பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும்
கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது.

After that, the conchshells, drums, bugles, trumpets  and horns were all suddenly
Sounded, and the combined sound was tumultuous.



Chapter 1 : Verse : 14

तत : श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ  |
माधव : पाण्डवश्चैव दिव्यौ शङखौ  प्रदध्मतु : ||
தத : ச்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ |
மாதவ : பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ரதத்மது :  ||

பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த
மாதவனும், பாண்டவனும் {அர்ஜுனன்} தங்கள் தெய்வீக சங்குகளை
உரக்க ஊதினார்கள்.

On the other side, both Lord Krishna and Arjuna, stationed on a great chariot drawn
By white horses, blew  their transcendental conchshells.





Chapter 1 : Verse : 15

 
पाञ्चजन्यं  हृषीकेशो देवदत्तं धनंजय : |
पौण्ड्रं दध्मौ महाशङखं भीमकर्मा वृकोदरः  ||
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவதத்தம் தனஞ்ஜய : |
பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர : ||

ஹருஷீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன்
தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான். பெருவினையாற்றுபவனாகிய
பீமசேனன் பௌண்ரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான்.

Lord krishna blew His conchshell, called paanchajanya, Arjuna blew his,
the Devadatta, and Bhima, the voracious  performer of herculean
tasks, blew his terrific conchshell, called Paundra.

 

 Chapter 1 : Verse : 16

अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिर : |
नकुल : सहदेवश्च सुघोषमणिपुष्पकौ ||
அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர : |
நகுல : ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ ||

குந்தியின் புதல்வன் ராஜா யுதிஷ்டிரன் அனந்தவிஜயம்
என்ற சங்கயும், நகுலனும் சஹதேவனும், சுகோஷம் மணிபுஷ்பகம்
என்ற சங்குகளையும் ஊதினார்கள்.

King Yudhishtira, the son of Kunti, blew his conchshell, the Anantha Vijaya
and Nakula and Sahadeva blew the Sughosha and Manipushpaka. 



Chapter 1 : Verse : 17

काश्यश्च परमेश्वास : शिखण्डी च महारथ : |
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजित :  ||
காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ : சிகண்டீ ச மஹாரத : |
த்ருஷ்டத்யும்னோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித : ||

விற்படையில் தலைசிறந்த காசிராஜனும், மஹாரதிகனான
சிகண்டியும், த்ருஷ்டத்யும்னனும், விராடதேசத்தரசனும்,
பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்,

The great archer the King of Kasi, the great fighter Sikandi, Dhrushtadhyumna,
Virata, the unconquerable Satyaki,

 

Chapter 1 : Verse : 18

 

द्रुपदो द्रौपदेयाश्च सर्वश : पृथिवीपते |
सौभद्रश्च महाबाहु : शङखान् दध्मु : पृथक् पृथक् ||
த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வச : ப்ருதிவீபதே |
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு சங்கான் தத்மு : ப்ருதக் ப்ருதக் ||

மண்ணாள்பவனே ! த்ருபதனும், த்ரௌபதியின் புதல்வர்களும்,
தோள்வலிமையுடைய சுபத்திரையின் மகனும் ஆக எல்லோரும்
தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்.

Drupada, the sons of Draupadi, and the others, O King, such as the mighty-armed
Son of Subhadra, all blew their respective conchshells.

 

Chapter 1 : Verse : 19

 

स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् |
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्  ||
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத் |
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுநாதயன் ||

மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச்
செய்வதாய், த்ருதராஷ்ட்ர மைந்தர்களின் நெஞ்சுகளை பிளந்தது

The blowing of these different conchshells became uproarious. Vibrating both in the sky
and on the earth, it shattered the hearts of the sons of Drutharashtra.

Chapter 1 : Verse : 20  

अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वज : |
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डव :  ||
அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான் கபித்வஜ : |
ப்ரவ்ருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுருத்யம்ய பாண்டவ : ||

அரசே ! [ த்ருதராஷ்ட்ர வேந்தே] அப்பால் குரங்குக்கொடியோனாகிய அர்ஜுனன்
போர் துவக்கத் தலைப்பட்டிருந்த த்ருதராஷ்டிரக் கூட்டத்தாரைப் பார்த்து, அம்புகள்
பறக்க ஆரம்பிக்குமுன்,

O King, [Drutharashtra] at that time Arjuna, the son of Pandu, seated in the chariot baring the flag
marked with Hanuman, took up his bow and before starting to shoot his arrows, and after looking at the sons of
Drutharashtra ,

🌷🌷🌷🌷🌷


No comments:

Post a Comment

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...