Tuesday, May 28, 2024

Bhagavat Gita Chapter 1 - Sloka 31 to 47

 Bhagavat Gita Chapter 1 - Sloka 31 to  47

 



Chapter 1 :
Verse : 31

निमित्तानि च पश्यामि विपरीतानि केशव|
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे  ||
நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ |
ந ச ஸ்ரேயோऽநுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே  ||

கேசவா கேடுடைய சகுனங்களை பார்க்கிறேன். போரில் சுற்றத்தரைக்
கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை.
I see only causes of misfortune, O Krishna, killer of Kesi demon[Keshava]
I do not see any good can come from killing my own kinsmen in this battle.



Chapter 1 : Verse : 32

न काङक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च |
किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा  ||
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச  |
கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர்ஜீவிதேன வா ||

க்ருஷ்ணா! வெற்றியையும், ராஜ்யத்தையும், இன்பங்களையும் நான்
 வேண்டுகிலேன். கோவிந்தா! நமக்கு ராஜ்யத்தால், போகத்தால் அல்லது
 ஜீவித்திருப்பதால்தான் ஆவதென்ன.
O my dear Krishna, I don’t have any desire in subsequent victory, kingdom, or happiness.
O Govinda, of what avail to us are a kingdom, happiness, or even life itself.


Chapter 1 : Verse : 33

 

येषामर्थे काङक्षितं नो राज्यं भोगा : सुखानि च |
त इमेऽवस्थिता युद्धे प्रणांस्त्यक्त्वा धनानि च ||
ஏஷாமர்த்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகானி ச |
த இமேऽவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தனானி ச ||

யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும்
விரும்பிகிறோமோ, இவர்கள் எல்லோரும் உயிரையும் செல்வங்களையும்
துறந்துவிட்டு யுத்தத்தில் நிற்கிறார்கள்.
All those kingdom, pleasure, happiness for whom we may desire them are now arrayed on this
battlefield leaving behind their lives and properties .


Chapter 1 : Verse : 34
आचार्या : पितर: पुत्रास्तथैव च पितामहा : |
मातुला: श्वशुरा: पौत्रा: श्याला: संबन्धिनस्तथा ||
ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா : |
மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்தினஸ்ததா ||

ஆசார்யார்கள், தந்தையர், மக்கள், பாட்டன்மார்கள், மாதுலர்கள், மாமனார்,
பேரர்கள், மைதுனர்கள் மற்றும் சம்பந்திகள்
Teachers, fathers, sons, grandfathers, maternal uncles, fathers-in-law, grandsons, brothers-in-law
and other relatives.





Chapter 1 : Verse : 35

एतान्न हन्तुमिच्चामि घ्नतोऽपि मधुसूदन |
अपि त्रैलोक्यराज्यस्य हेतो: किं नु महीकृते ||
ஏதான்ன ஹந்துமிச்சாமி க்னதோபி மதுசூதன |
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே ||

            மதுஸூதனா, நான் கொல்லப்படினும், மூவுலகை ஆளுதற்கென்றும் இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டு கொல்வேனா?             
 O Madhususana, why should I wish to kill them, even though they otherwise
 Kill me or even in exchange of three worlds, will I kill for the sake of earth.

 

 Chapter 1 : Verse : 36

निहत्य धार्तराष्ट्रान्न: का प्रीति: स्याज्जनार्दन |
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिन : ||
நிஹத்ய தார்தராஷ்ற்றான்ன: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜனார்தன |
பாபமேவாஸ்ரயேதஸ்மான்ஹத்வைதானாததாயின : ||

ஜநார்தனா, த்ருதராஷ்ட்ரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன
இன்பம் வரப்போகிறது? இந்த ஆததாயிகளைக் கொல்வதால் பாபமே
நம்மை வந்தடையும்.
What pleasures will we derive by killing the sons of Drutharaashtra? Sin will overcome us if we slay such aggressors.



Chapter 1 : Verse : 37

तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान् |
स्वजनं हि कथं हत्वा सुखिन: स्याम माधव ||
தஸ்மான்னார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ரான்ஸ்வபாந்தவான் |
ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின : ஸ்யாம மாதவ ||

ஆதலால், நம் சுற்றத்தாராகிய த்ருதராஷ்ட்ர புத்திரர்களைக் கொல்லுதல் நமக்குத்
தகாது. மாதவா, உற்றாரைக் கொன்று நாம் இன்புற்றிருப்பது எங்ஙனம்.
Therefore, it is not proper for us to kill the sons of Drutharashtra who are our relatives. O Madhava
How could we be happy by killing our own kinsmen?

 

Chapter 1 : Verse : 38

 

यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतस : |
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् ||
எத்யப்யேதே ந பச்யந்தி லொபோபஹதசேதஸ : |
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் ||

ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும்
மித்ர த்ரோகத்தால் விளையும் பாதகத்தையும் காண்கிலர். ஆயினும்
Although these men, their hearts overtaken by greed, see no fault in killing one’s family or
betraying friends

 

Chapter 1 : Verse : 39

 

कथं न ज्ञेयमस्माभि :पापादस्मान्निवर्तितुम् |
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन  ॥
கதம் ந ஞேயமஸ்மாபி : பாபாதஸ்மாந்நிவர்திதும் |
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர்ஜனார்தன ||

குல நாசத்தால் உண்டாகும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் ஏன், ஜனார்தனா,
இப்பாபத்தினின்று பின்வாங்கத் தெரிந்துகொள்ளலாகாது?
Why should we, who can see the crime in destroying a family, engage in these acts of sin?


Chapter 1 : Verse : 40

कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा : सनातना : |
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत  ||
குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: சனாதனா : |
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமதர்மோऽபிபவத்யுத ||

குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும்
அதர்மம் சூழ்கிறது.
With the destruction of dynasty, the eternal family tradition is vanquished, and thus the rest of the family
becomes involved in irreligion.

 

 

🌷🌷🌷🌷🌷



 

Chapter 1 : Verse : 41

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय : |
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः ||
அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய : |
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர : ||

அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். க்ருஷ்ணா, கற்பிழக்குமிடத்து
வர்ணக் கலப்பு உண்டாகிறது.
When irreligion is prominent in the family, O Krishna, the women of the family become polluted, and from the degradation
of womanhood, O descendant of Vrushni, comes unwanted progeny.



Chapter 1 : Verse : 42

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च |
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रिया : ||
ஸங்கரோ நரகாயைவ குலக்நானாம் குலஸ்ய ச |
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா : ||

கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே எற்படுகிறது. அவர்களுடைய
பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்.
Hellish life for both the family and for those who destroy the family tradition. The ancestors of such corrupt
families fall down, because the performances for offering them food and water are entirely stopped.



Chapter 1 : Verse : 43

 

दोषैरेतै : कुलघ्नानां वर्णसङ्करकारकै : |
उत्साद्यन्ते जातिधर्मा : कुलधर्माश्च शाश्वता : ||
தோஷைரேதை : குலக்நானாம் வர்ணஸங்கரகாரகை : |
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா : குலதர்மாஸ்ச சாஸ்வதா : ||

குலநாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி
தர்மங்களும் குலதர்மங்களும் நிலை குலைக்கப்படும்.
By the evil deeds of those who destroy the family tradition and thus give raise to all kinds of community and family
welfare activities are devastated.

Chapter 1 : Verse : 44
 

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन  |
नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम  ||
உத்ஸன்னகுலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்தன |
நரகே நியதம் வாஸோ பவதீத்யனுசுஸ்ரும ||

ஜனார்தனா, குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று
கேட்டிருக்கிறோம்.
O Krishna, we have heard by disciplic succession that those who destroy family traditions dwell always in hell.

Chapter 1 : Verse : 45
 

अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् |
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता : ||
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் |
யத்ராஜ்யசுகலோபேன ஹந்தும் ஸ்வஜனமுத்யதா: ||

அரசசுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாபத்தைச்
செய்யத் தலைப்பட்டோம், அந்தோ!
Alas, how strange it is that we are preparing to commit greatly sinful acts. Driven by the desire to enjoy
royal happiness, we are intent on killing our own kinsmen.

 

Chapter 1 : Verse : 46
 

यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणय : |
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्  ||
யதி மாமப்ரதீகாரமசஸ்த்ரம் சஸ்த்ர பாணய : |
தார்த்தராஷ்ட்ரா ரணே ஹன்யுஸ்தன்மே க்ஷேமதரம் பவேத் ||

ஏதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கிற என்னைக் கையில் ஆயுதம் பிடித்து
த்ருதராஷ்ட்ர மக்கள் யுத்தத்தில் கொல்லுவார்களானால் அதுவே எனக்குப் பெரு நன்மையாகும்.
Better for me if the sons of Dhrutharaashtra, who hold the weapons in their hands, were to kill me unarmed and
unresisting on the battlefield.

Chapter 1 : Verse : 47
 

सञ्जय उवाच

एवमुक्त्वाऽर्जुन : सङ्ख्ये रथोपस्थ उपाविशत् |
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानस : ||
ஏவமுக்த்வாऽர்ஜுன: சங்க்யே ரதோபஸ்த உபாவிசத் |
விஸ்ருஜ்ய ஸ்சரம் சாபம் சோகசம்விக்னமானஸ : ||

ஸஞ்ஜயன் சொன்னது
இங்ஙனம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்துவிட்டுத் துயரம் துய்க்கும்
மனத்தினனாய் அர்ஜுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.


Sanjaya said
Arjuna, having thus spoken on the battlefield, cast aside his bow and arrows and sat down on the chariot, his
mind overwhelmed with grief.

इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अर्जुनविषादयोगो नाम प्रतमोऽध्याय : ||
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீ
க்ருஷ்ணார்ஜுன சம்வாதே அர்ஜுனவிஷாதயோகோ நாம ப்ரதமோத்யாய : ||
 

 

By God’s grace we finished reading 1st chapter of Bhavat Gita🙏




 

🌷🌷🌷🌷🌷




No comments:

Post a Comment

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...