Thursday, July 25, 2024

Bhagavat Gita Chapter 3 - Sloka 36 to 40

Chapter 3 : Verse : 36

अर्जुन उवाच
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुष: |
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजित: ||
அத கேன ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ: |
அனிச்சன்னபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: ||

அர்ஜுனன் சொன்னது:

விருஷ்ணி வம்சத்தவரே, அப்படியானால் இந்தப் புருஷன் இச்சையில்லாதிருந்தாலும், பலாத்காரமாய், ஏவப்பட்டவனைப் போல எதனால் தூண்டப்பட்டவனாக பாபத்தை செய்கிறான்.
Arjuna said:
O descendant of Vrsni, by what, one is impelled to sinful acts, even eventually, as if engaged by force?


Chapter 3 : Verse : 37

श्री भगवानुवाच

काम एष क्रोध एष रजोगुणसमुद्भव: |
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ||
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணசமுத்பவ: |
மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹ வைரிணம் ||

ஶ்ரீ பகவான் சொன்னது:
ரஜோகுணத்துதித்த இக்காமமும், க்ரோதமும்தான் எதையும் உண்ணவல்லதும், பெரும் பாபமுடையதும் ஆகும். இதை எதிரியென அறிக.
Sri Bhagavan said:
It is desire begotten of the elements of Rajas, which appears as wrath; nay, it is insatiable and grossly wicked. Know this to be the enemy in this case.




Chapter 3 : Verse : 38

धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च |
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् ||
தூமேனாவ்ரியதே வஹ்னிர்யதாதர்சோ மலேன ச |
யதோல்பேனாவ்ருதோ கர்பஸ்ததா தேனேதமாவ்ருதம் ||

நெருப்பானது புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், சிசு கருப்பையினாலும் மூடப்பட்டிருப்பது போன்று இந்த ஞானமானது ஆசையினால் மூடப்பட்டிருக்கிறது.
As fire is covered by smoke, as a mirror is covered by dust, or as the embryo is covered by the womb, the knowledge is covered by different degrees of lust.


Chapter 3 : Verse : 39

आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा |
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ||
ஆவ்ருதம் ஞானமேதேன ஞானினோ நித்யவைரிணா |
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேன ச ||

குந்தியின் மைந்தா, ஞானியின் நித்திய சத்ருவும், வேண்டியவடிவெடுப்பதும், நிரப்பமுடியாததும்,போதும் எனாததுமாகிய இந்த ஆசையினால் ஞானமானது மூடப்பட்டிருக்கிறது.
And, Arjuna, the knowledge becomes covered by his eternal enemy in the form of lust, which is never satisfied like fire.

Chapter 3 : Verse : 40

इन्द्रियाणि मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते |
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् ||
இந்த்ரியாணி மனோபுத்திரஸ்யாதிஷ்டானமுச்யதே |
ஏதைர்விமோஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம் ||

இந்திரியங்களும், மனதும், புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது.
The senses, the mind and the intellect are declared to be its seat; screening the light of Truth through these; it [desire] deludes the embodied soul.

No comments:

Post a Comment

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...